இடுகைகள்

அடகுத் தமிழ் அறிவோம்

அன்னைத் தமிழில் ஏராளமான வடமொழிச் சொற்கள் புகுத்துப்பட்டு அவை இன்றளவும் நம் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தி வருகிறோம். வடமொழிச் சொற்கள் பெரும்பாலும் ன் ஸ் த் ப் என்ற மெய் எழுத்துகளை முதன்மையாக (<முக்கியமாக - முக்யம்) கொண்டவை. எனவே இவற்றை எளிதாக (<சுலபமாக - சுலப்) வடமொழிச் சொற்கள் என்று நாம் புரிந்து கொண்டு அவற்றை தவிர்த்து நம் அன்னைத் தமிழில் அதற்கெனப் பொருள் தரும் சொற்களைப் பயன்படுத்த முடியும். பிரபஞ்சம் தரும் எமது ஆழ்மன உணர்வின்படி வடமொழிக்கு எழுத்து  வடிவமும் சொற்களும் வழங்கியதே நம் தமிழன்னைதான் என உறுதியாகச் சொல்ல முடியும்.  தமிழின் பெரும்பாலான எழுத்துக்களே வடமொழியில் இருப்பதே இதற்குச் சான்றாகும். அது சரி எவையெல்லாம் வடமொழிச் சொற்கள் என்று இன்னும் எளிதாக நாம் கண்டறிவது என்ற உங்கள் கேள்விக்கான பதிலை நம் தமிழன்னையே மிக அருமையாக விளக்கி உள்ளார்.  தமிழின் முதல் எழுத்து அகரம் எனத்தான் துவங்குகிறது. நம் அன்னைத் தமிழில் கலந்து விட்ட வட மொழிச் சொற்களின் முன் எழுத்தாக இந்த அகரம் எனும் சிகர எழுத்தை நாம் சேர்த்துப் பார்த்தாலே போதும் அவை வடமொழிச் சொற்கள்தான் என்பது உறுதிய...

உன்னை நான் சந்தித்தேன்! நீ ஆயிரத்தில் ஒருவன்!

ஐந்து வயதில் முதன் முதலாக நான் துவக்கப்பள்ளியில் சேர்ந்து எழுது பலகையை எனது வலது கையில்  பிடித்துக்கொண்டு இடது கையில் எழுதுகுச்சியால் எழுதத் துவங்கினேன். இதைக்கண்ணுற்ற எனது வகுப்பாசிரியை திருமதி புஸ்பா அவர்கள் எனது இடது கையில் தனது கரத்தில் இருந்த பிரம்பால் சில அடிகள் வைத்து என்னை வலது கையால் எழுதும்படி பயிற்றுவித்தார். அன்றைக்கிருந்த ஆசிரியர்களின் மனநிலையும் மக்களிடம் நிலவிய மூடத்தனமான தவறான எண்ணங்களும் இடது கையால் எழுதுவது தவறெனப்பட்டதின் விளைவினால் எனது எழுதும் பழக்கத்துடன் எனது தலையெழுத்தையும் அவர்கள் மாற்றி எழுதத் துவங்கிவிட்டதாகத்தான் கருதி வந்தேன்.  பொதுவாக இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் உலகத்தில் சுமார் ஆயிரத்தில் ஒருவராகத்தான் பிறக்கின்றனர். வலது கைப்பழக்கம் உள்ளவர்களைக் கட்டுப்படுத்தும் மூளையின் அமைப்பு எங்களைப்போன்ற இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இடம்மாறி இருப்பதால் எங்களின் அனைத்துப் பழக்க வழக்கங்களும் வலதுகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு நேரெதிராகத்தான் இருக்கும். எந்தப் பொருளை எடுப்பதாக இருந்தாலும், மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்களையும் நாங்கள் இடத...

தேவை ஒரு சர்வாதிகாரமற்ற மக்களுக்கான அரசியல் இயக்கம்.

சர்வாதிகார தலைமையற்ற சுழற்சி முறை கொண்ட தன்னலமற்ற நிர்வாகம் நிறைந்த அரசியல் மாண்பு. வாரிசுகளோ, உறவினர்களோ ஆதிக்கமற்ற அரசியல் கொள்கை, ஐந்தாண்டுக்கொருமுறை சுழற்சி முறையில் நிர்வாகிகள் மாறும் மாண்பு.  ஐந்தாம் தேன் தமிழ்ச்சங்கத்தில் இணையும் ஒவ்வொருவரும் தமிழகம் வளம் பெற வேண்டும் என்ற ஒத்த கருத்துடையவர்களாக பணியாற்றும் சமத்துவம். ஒவ்வொரு கிளை, ஒன்றியம், வட்டம், மாவட்டம், என எங்கும் சாதி, மத பேதமற்ற நிர்வாகிகள் கொண்ட சமத்துவ அரசியல் பண்பு, ஆட்சி நிர்வாகத்தில் அணு அளவும் தலையிடாத ஒழுக்கம், இயக்கச் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை, கொடி,  நிதி என மக்களிடமோ, மற்றவர்களிடமோ கையேந்தாமல் இணையம் வாயிலாக மட்டுமே செயல்படல், இன்னும் தேவைப்படும் ஏராளமான மாற்றங்களுடன் ஒரு மகத்தான அரசியல் இயக்கம் உருவாக்குவோம். தமிழ்நாடு மட்டுமல்ல உலகிற்கே இந்த அரசியல் இயக்கம் ஒரு முன்னோடி இயக்கமாகத் திகழ வேண்டும். இந்த இயக்கத்தின் அப்பழுக்கற்ற மக்கள் தொண்டெனும் உயரிய தன்மையால் இன்றுள்ள அரசியல் இயக்கங்கள் ஒன்றுகூட வரும் காலங்களில் மக்களை வஞ்சிக்கும் செயலில் ஈடுபடுவதற்குத் துளியும் வாய்ப்பின்றி ...

தாயில்லாமல் நானில்லை

இன்று எங்கள் அன்னையின் நினைவு நாள். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எங்களின் அன்னை வேதனைகள் சுமந்த வாழ்க்கையைத்தான் அனுபவித்து வந்தார். எனக்கு 10 வயது இருக்கும்போது எங்களது மூத்த சகோதரியின் திருமணம் மட்டுமே பிளவுபடாத எங்கள் பாட்டி முத்தாயம்மாள் குடும்பம் ஒற்றுமையுடன் நடத்தியது எனலாம்.  அதன் பின்னர் வசதியாக வாழ்ந்த எங்கள் குடும்பம் பிளவுபட்ட நிலையில் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட நிலையிலும் மீதமுள்ள தனது மூன்று பிள்ளைகளையும் எவ்வளவோ இன்னல்களுக்கு இடையிலும் எங்களுக்கு வறுமையின் நிறம் அறியாமல் தான் பட்டினி கிடந்தேனும் அரவணைத்து வளர்த்தவர். இளம் வயதில் உணவை நான் இறைத்து உண்ணும்போது படிப்பறிவு குறைந்த நிலையிலும் ஏசு நாதர் உணவை வீணாக்காமல் தன் கையில் ஒரு ஊசியை வைத்துக் கொண்டு சிதறும் ஓரிரு பருக்கைகளையும் குத்தி எடுத்து உண்பார் என்று என்னுள் ஏசு கிறிஸ்துவையும் அறிமுகப்படுத்தியவர். (பின்னாளில் அது திருவள்ளுவர்  வாழ்வில் நடந்த நிகழ்வு என்பதை நான் அறிந்தேன்) ஒரு முறை எனது எட்டாம் வகுப்பு ஆசிரியை ஒருவர் சேலத்தில் இருந்து நாகரீகமாக உடை அணிந்து  வருபவர் என்னை எதற்கோ அடித்துவிட நான் இல்லம...

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா

இந்தப் பாடல் வரிகள் கொடுக்கும் உத்வேகம் முற்றிலும் எனக்காகவே என்றே நான் நினைக்கிறேன்.  மக்கள் திலகத்தை அறவே பிடிக்காத என்னை என் இளமையில் உறவினர் எவரோ வலுக்கட்டாயமாக இந்தத் திரைப்படம் பார்க்க என்னை அழைத்துச் சென்றது இன்றும் என் மனதில் நிழலாடுகிறது. அப்பொழுது எங்கள் ஊரில் இருந்த ஒரே திரை அரங்கின் பெயர் புஷ்பா டூரிங் டாக்கீஸ். இது என் பெரியப்பா திரு. துளசிபிள்ளை அவர்களின் சம்பந்தியும் என் மனம் கவர்ந்த சகோதரி சிங்காரவேல் ராஜேஸ்வரியின் மாமனார் MR என்று அழைக்கப்பட திரு.ராமசாமி அவர்களால் நடத்தப் பட்ட திரை அரங்கம். அன்றைய தினம் இந்தப் படத்தைப் பார்க்க எங்கள் ஊர் மட்டுமன்றி சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரண்டு வந்திருந்த மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கூட்டம் மூன்று மடங்காகத் திரண்டிருந்த காரணத்தால் எங்களால் திரை அரங்கு உள்ளே செல்ல இயலாமல் போனது. எனினும் நாங்கள் வெகு நேரம் அங்கே வெளியில் இருந்தவாறு படத்தின் கதை வசனத்தைக் கேட்டவாறு இருந்தோம். படம் முழுக்க திரை அரங்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த ஆரவாரம். விசில் சப்தம் காதைக் கிழிக்க அதையும் தாண்டி அதிக வால்யூமுடன் இந்தப் பாடல் இன்றும் என் காத...

ஊழலில் உதிர்ந்த மலர்கள்

நேற்று காலை எனது 10 வயதில் கல்வி பயின்ற ஐந்தாம் வகுப்பு தொடக்கப் பள்ளியை கடந்து செல்லும்போது என்னை அறியாமல் அங்கு ஒருகணம் நின்று விட்டேன்  என் கண்களில் முதலில் பட்டது நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது இருந்த கட்டிடம் இந்த கட்டிடம் எனது ஐந்து வயதில் கட்டப்பட்டது  அதாவது கிட்டத்தட்ட 55 ஆண்டுகள் கடந்தும் இன்றும் பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்தது இதனைக் கட்டியவர் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் இருந்த ஒரு கட்டுமான ஒப்பந்ததாரர்  அதற்கு அருகிலேயே இரண்டுமுறை இழுத்துக் கட்டப்பட்டு தற்போது வட்டார கல்வி அலுவலர் அலுவலகமாக செயல்படும் பார்க்க வெளிப்பூச்சு அழகாக தோன்றும் உள்ளே உளுத்துப்போன ஊழல் கட்டுமானக் கட்டிடம் ஒன்றும் காட்சியளித்தது  நான் பெரும்பாலும் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள அரசு கட்டிடங்களின் நிலையைத்தான் கவனிப்பது வழக்கம்  இந்தக் கட்டிடங்களில் வெள்ளையர்கள் ஆண்ட போதும் வெளியேறிய நாள் வரை கட்டப்பட்டு இன்று வரையும் கூட உறுதியாக நிற்கும் கட்டிடங்களையும் காண்பேன்  பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் நாடு இருந்த வறிய நிலைக்கு ஏற்ப குறைந்த வரி ஆதாரத்தில் எளிமையாகக...

தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் ஒரு ஒப்புமை

நம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர் யார் என்று அறியாதவர்களே மிக அதிகம் அதே போன்ற நிலைதான் வடக்கிலும் தேசிய கீதம் பாடியவர் யார் என்று அறியாதவர்களும் பெரும்பான்மை ஆக இருக்கக் கூடும். முன்னதை நான் ஈரோட்டில் ஒரு ஆய்வின் வாயிலாக அறிய முடிந்தது பின்னதை ஜெய் கிண்டியா ஆட்கள்தாம் ஆய்வு செய்து அறிவு தெளிதல் வேண்டும். தலைப்புக்கு உள்ள விளக்கம் இங்கு யாதெனில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலிலும் தேசிய கீதப் பாடலிலும் பரத கண்டம் பாரத என்ற சொல்லே இடம் பெற்று உள்ளது என் ஆய்வின்படி கவுரவர் பாண்டவர் யுத்தம் இன்னும் முடிவு பெறவே இல்லை கவுரவர் ஆரிய இனம் பாண்டவர் தமிழர் வரலாறு தன்னையே திருப்பிக் காட்டும் போது இந்த உண்மையும் வெளிச்சத்துக்கு வந்தே தீரும் அகண்ட(மகா வட மொழி)பாரதம்  முழுவதும் அற தெய்வமாம் தமிழ்அன்னையின் ஆட்சியின் கீழ் வரும். இது காலத்தின் கட்டாயம் அவாளுக்கு கலி யுகம் முடியும் காலம்  வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது வேங்கை யாரடா அது சோழப் பேரரசின் மாமன்னன் முருகன்தானடா