இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தாயில்லாமல் நானில்லை

இன்று எங்கள் அன்னையின் நினைவு நாள். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எங்களின் அன்னை வேதனைகள் சுமந்த வாழ்க்கையைத்தான் அனுபவித்து வந்தார். எனக்கு 10 வயது இருக்கும்போது எங்களது மூத்த சகோதரியின் திருமணம் மட்டுமே பிளவுபடாத எங்கள் பாட்டி முத்தாயம்மாள் குடும்பம் ஒற்றுமையுடன் நடத்தியது எனலாம்.  அதன் பின்னர் வசதியாக வாழ்ந்த எங்கள் குடும்பம் பிளவுபட்ட நிலையில் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட நிலையிலும் மீதமுள்ள தனது மூன்று பிள்ளைகளையும் எவ்வளவோ இன்னல்களுக்கு இடையிலும் எங்களுக்கு வறுமையின் நிறம் அறியாமல் தான் பட்டினி கிடந்தேனும் அரவணைத்து வளர்த்தவர். இளம் வயதில் உணவை நான் இறைத்து உண்ணும்போது படிப்பறிவு குறைந்த நிலையிலும் ஏசு நாதர் உணவை வீணாக்காமல் தன் கையில் ஒரு ஊசியை வைத்துக் கொண்டு ஓரிரு பருக்கைகளையும் குத்தி எடுத்து உண்பார் என்று என்னுள் ஏசு கிறிஸ்துவையும் அறிமுகப்படுத்தியவர்.(பின்னாளில் அது திருவள்ளுவர்  வாழ்வில் நடந்த நிகழ்வு என்பதை நான் அறிந்தேன்) ஒரு முறை எனது எட்டாம் வகுப்பு ஆசிரியை ஒருவர் நாகரீகமாக உடை அணிந்து சேலத்தில் இருந்து வருபவர், என்னை எதற்கோ அடித்துவிட நான் இல்லம் திரும்பி அவரது நாகரீக