இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதயத்தை விலையாய் கொடுத்துவிட்டு அன்பினை வாங்கப் பிறந்து விட்டேன்

செல்வம் சேர்த்தல் என்பது என் இலக்காக இருந்தே இல்லை. பணம்  உள்ளவர்களிடம் இருக்கும் அகந்தை குணாதிசயங்கள் என்னிடம் வளர நான் அனுமதித்தது கிடையாது.  இளம் வயதில் வறுமை நிலையினை அங்குலம் அங்குலமாக அனுபவித்தவன் நான். சொந்த ஊரை விட்டு நாடோடியாகிப் பல ஆண்டுகள் கடந்தும் 100 கல் தொலைவில் இருந்தும் உறவுகளைப் பிரிந்த தவிப்பும் அன்பும் அவர்கள் உதாசீனம் காட்டியபோதும் மாறவே இல்லை.  சிறு கோபம் வந்தாலும் அவர்கள் குணம் அப்படியே இருக்கட்டும்.  நாம் நமக்குள் எழும் கோப எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சமாதானம் ஆவேன். ஏராளமாகப் பணம் புரளும் வணிகம் செய்தபோதும் எனக்கெனச் செலவிட்ட தொகை மாதம் நூறு ரூபாய்களை தாண்டியதில்லை. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவன் தொழிலாளி என்ற தமிழன்னையின் பாடல் வரிகளுக்கேற்ப இன்று வரை வாழ்ந்து வருபவன். நான் எவருக்கும் போட்டியாகவும் ஓடவில்லை. எவர் வாழ்வையும் பொறாமையாகப் பார்த்ததும் இல்லை. எவர் வாழ்வையும் கெடுத்ததும் இல்லை. வணிகத்தில் பட்ட கடனை அடைக்க என் வாழ் நாள் முடிவதற்குள் என்னை வழி நடத்தும் மகா சக்தி ஆற்றல் தரும் என்ற நம்பிக்கையை நெஞ்சில் சுமப்பவன் நான். எ

நான் கடவுளைக் கண்டேன்! ஷர்மிளா

நான் கடவுளைக் கண்டேன்!  ஒரு குழந்தை வடிவிலே!! அவன் கருணையைக் கண்டேன்!!!  கொஞ்சும் மழலை வடிவிலே!!!! அவள் ஒரு சாலை ஓரம் வசிக்கும் குடும்பச் சிறுமி. ஒரு நாள் என் எதிரே அவள் வந்தபோது என்னிடமிருந்த 3 ரூ பிஸ்கட்டைக் கொடுக்க மகிழ்வுடன் பெற்றாள். இன்று மீண்டும் நான் அவளை அழைத்து அதே பிஸ்கட்டை பால் வழங்கும் அங்காடியில் வாங்கிக் கொடுத்தேன். பெற்றுக்கொண்டு சாலையைக் கடந்த அவள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு நாய்க் குட்டியிடம் கொஞ்சியவாரே அந்த பிஸ்கட்டை புகட்டத் தொடங்கினாள். என் விழிகள் கசிந்தன. இன்னும் இந்தத் தமிழ் மண்ணில் அன்புக்குப் பஞ்சமில்லை. தமிழன்னை எங்களை என்றும் அன்போடு வாழ வைப்பார்!!!!! அவரே உலகின் கருணைத் தாய்!!!!!! பின்குறிப்பு அந்தச் சிறுமியின் பெயர் ஷர்மிளா அவளது தந்தையின் தொழில் சோதிடம் பார்ப்பது  சாலையோரத்தில் அமைந்துள்ள புளியமரத்தின் அடியில் தான் அவர்கள் குடும்பம் வசித்து வருகிறது  மழை காலத்தில் இடி மின்னலில் அந்த குடும்பம் எப்படி தாக்குப் பிடிக்கும் என்பதுதான் என்னுடைய இப்போதைய கவலை வருவோர் போவோருக்கு எல்லாம் சோதிடம் சொல்பவரின் நிலை சாலையோர புளிய மரத்து அடி என்பதுதான்  சாதகம் பா

அக்கம் பக்கம் பாக்காதே

வீடும் உறவும் நட்பும் புரிதல் இன்றிப் பணம் சேர்க்க வக்கும் தொழில் செய்யத் திறமையும் இல்லாதவன் என்று முடித்துக் கட்டி என்னைச் சோக முகம் காட்டி வாழு என்கிறது நானோ அங்கே சோகம் வீட்டை விட்டு வெளியே வந்தால் வேலைக்குச் செல்லும் போதும் ராஜா என்னைப் போல மகிழ்சியாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஒருவரும் காணேன்  என் எதிரே துக்கம் சுமந்த முகங்கள் எந்நேரமும் வீடு பணம் வணிகம் கடன் பற்றிய சிந்தனை சுமந்து விழிப்புணர்வு அற்ற நிலையில் கடக்கும் முகங்கள் உறவுகள் நட்புகள் என் எதிரே கடந்தாலும் நான்தான் அவர்களைக் கண்டு அழைப்பேன் அவர்களோ சிந்தனை தோய்ந்த முகத்துடன் விழிப்புணர்வு அற்ற நிலையில் பயணிப்பர் இதில் விதி விலக்கானவர்கள் காதலர்கள் ஆண் அல்லது பெண் நண்பர்கள் இணைந்து செல்லும் போதும் அலை பேசியில் கதைத்துக் கொண்டும் முகம் மகிழ்ந்த பயணம். விபத்துகளும் தன் தவறு புரியாமல் சண்டைகளும் நடந்தேற  எந்த நேரமும் எதையோ சிந்தித்த நிலையில் பயணிப்பதே முக்கிய காரணம் வாகனத்தை இயக்கும்போது என் கவனம் எதிரே அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் பின்பக்கம் வருவோரை சைடு மிரர் வழியே கவனிப்பேன். எனினும் பின்னால் வர

பூங்காற்று திரும்புமா?

முதல் மரியாதை இந்தப் படம் நேற்று ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது நடிகர் திலகம் என்ற பூவிலிருந்து உதிர்ந்து என்றோ புத்தகத்தில் வைத்த தாழம்பூ மாடலாக இன்றும் நறுமணம் வீசிக் கொண்டிருக்கும்  ஒட்டுமொத்தக்  கலைஞர்களுக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துதல்களைச் சமர்ப்பிக்கிறேன்.  இந்தத் தமிழின வரலாற்றுப் பெட்டக ஓவியத்தை முழுமையாகப் பார்க்க வேண்டும் என்ற என் ஆவல் வணிகம் செய்தும் வேலை செய்தும் பிழைக்க வேண்டிய நிலை இனி எனக்குத் தேவையில்லை என்று  உறுதியான நம்பிக்கை கொண்டு துவக்கிய கலைப்பொருள் தயாரிப்புக்கூடம் பொது முடக்கத்தால் முடங்கிப் போன நிலையை  முடக்கிவிடாமல் வீட்டில் இருந்து தொடருவதால் இயலாமல் போனது. இந்தப் படத்தில் வரும்  பூங்காற்று திரும்புமா பாடலில் ஒரு வார்த்தைத் தொடர் வரும் எங்க சாமிக்கு மகுடம் ஏரணும் மதவாத ஊழல்வாதப் போலிச் சாமிகளின் மகுடங்கள் சாவடிக்கப்பட்டு  தமிழன்னையின் அழகு முகத்தில் வெற்றி மகுடம் சூட்டும் நாள் வெகு விரைவில்.  இளைய சமுதாயத்திற்கு என் கருத்துகள் ஏன்  ஏற்புடையதாக இல்லை என்று ஆய்வு செய்தேன். அப்பொழுதுதான் எனக்குப் புலனானது இவை அனைத்தும்  இன்றைய முன்னணிக் கதாநாயகர்கள்

பசுமை நிறைந்த நினைவுகளே ராம் கமால்

என்னை விட ஒரு வயது குறைவு நான் 11th SSLC ராம் கமால் 10th SSLC இருவரும் உறவும் நட்பும்   என் இளைய தமக்கை பிரேமா அக்கா கணவர் சம்பத் மாமாவின் தாய் மாமா அவர்களின் மகனாக அறிமுகம் ஆகாதவர் கமால். என் வகுப்புத் தோழனும் என் தாய் மாமாவின் மைத்துனரும் ஆன தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநர் ஆகப் பணி புரிந்த நண்பர் பாஸ்கரின் வீட்டுக்கு விளையாடச் செல்லும்போது எதிர் வீட்டில் கமால் குடும்பம் வசித்தது.  பள்ளியில் நான் என் நண்பர்கள் ரவீந்திரன் அண்ணாமலை அன்பழகன் நால்வர் அணி.  ரவீந்திரன் வீட்டுக்கும் பாஸ்கரின் வீட்டுக்கும் விளையாடச் செல்லும்போது அறிமுகம் ஆனவர் கமால்.  விளையாட்டுத் தோழன் இல்லை என்றாலும் பள்ளி இறுதி வகுப்புவரை எங்களுடன் படித்தவர் என்பதாலேயே எங்கள் நட்பு வளர்ந்தது. 17 வயதில் பிரிந்து என் 42 வயதில் இணைந்தது எம் நட்பு பிரிந்த நட்பு மீண்டும் இணைந்த போது  அவரின் தந்தை எங்களிடம் இல்லை. என்னுள் பகுத்தறிவுச் சுடர் பிரகாசிக்கத் தூண்டுதலாக இருந்தவர் கமாலின் தந்தையார் பெருமதிப்பிற்குரிய கிள்ளி வளவன் அவர்கள் மகுடம் சாவடி ஒன்றியப் பெருந்தலைவர் பதவியை அலங்கரித்து அரசியல் ஆதாயம் தேடாதவர் அ