அக்கம் பக்கம் பாக்காதே

வீடும் உறவும் நட்பும் புரிதல் இன்றிப் பணம் சேர்க்க வக்கும் தொழில் செய்யத் திறமையும் இல்லாதவன் என்று முடித்துக் கட்டி என்னைச் சோக முகம் காட்டி வாழு என்கிறது

நானோ அங்கே சோகம்
வீட்டை விட்டு வெளியே வந்தால்
வேலைக்குச் செல்லும் போதும் ராஜா

என்னைப் போல மகிழ்சியாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஒருவரும் காணேன்

 என் எதிரே துக்கம் சுமந்த முகங்கள்

எந்நேரமும் வீடு பணம் வணிகம் கடன் பற்றிய சிந்தனை சுமந்து விழிப்புணர்வு அற்ற நிலையில் கடக்கும் முகங்கள்

உறவுகள் நட்புகள் என் எதிரே கடந்தாலும் நான்தான் அவர்களைக் கண்டு அழைப்பேன்

அவர்களோ சிந்தனை தோய்ந்த முகத்துடன் விழிப்புணர்வு அற்ற நிலையில் பயணிப்பர்

இதில் விதி விலக்கானவர்கள் காதலர்கள்

ஆண் அல்லது பெண் நண்பர்கள் இணைந்து செல்லும் போதும் அலை பேசியில் கதைத்துக் கொண்டும் முகம் மகிழ்ந்த பயணம்.

விபத்துகளும்
தன் தவறு புரியாமல் சண்டைகளும் நடந்தேற  எந்த நேரமும் எதையோ சிந்தித்த நிலையில் பயணிப்பதே முக்கிய காரணம்

வாகனத்தை இயக்கும்போது என் கவனம் எதிரே அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும்
பின்பக்கம் வருவோரை சைடு மிரர் வழியே கவனிப்பேன்.

எனினும் பின்னால் வருபவர்கள் சிந்தனை சுமந்து வந்து நான் இண்டிகேட்டர் போட்டு கை காட்டி சிக்னல் செய்து என் திருப்பம் வரை சென்றாலும்

பின்னே வருபவர் அல்லது முன்னே வருபவர் விலகாமல் 

எரிச்சலும் கோபமும் கொண்டு சண்டைக்கு வருவர்

என் வாகனத்தின் பின் புறம் இடித்து கீழே விழுந்தவர்கள் கடுமையாகத் தன் தவறு ஒப்புக்கொள்ளாமல் தெரு நாயைப் போலக் குரைப்பர்

பாவம் சாலை விதிகள் அறியாமல் வாழ்ந்து வாழ்வு தொலைக்கப் பிறந்தவர்கள்.

காசு கொடுத்தால் டிரைவிங் பள்ளிகள் சாலைப் போக்குவரத்து அலுவலர் அதாங்க RTO கையூட்டு உடனடி லைசென்ஸ்.

கட்டுப்பாடு இன்றிப் பறந்து போ 

சொர்க்கமா நரகமா 

மதவியாதிகள் இருக்க கவலை எதற்கு

உன்னுடன் ஜக்கி விக்கி நித்தி பராசக்தி ஶ்ரீ சிரி ஏராளம் ஏராளம் மோட்சம் தர வரிசை கட்டி. 

உன் வசதிக்கேற்ப காணிக்கை போடு. கூடவே இவர்கள் மகிமை பற்றி விளக்கி நான்கு பேரை அழைத்து வந்தால் போனஸாக சொர்க்கம் நரகம் ஏதேனும் அவர்களுக்கும் நிச்சயம்.

என் விழிப்புணர்வுப் பயணம்  என் நேர்மை என் ஒழுங்கு இதுவரை என்னைக் காக்கிறது

அக்கம் பக்கம் பார்க்காமல் கண் மூடிய குதிரைதான் தன்னை இயக்குபவன் சொடுக்கும் சாட்டைக்கும் தன் முகத்துடன் இணைக்கப்பட்ட கடிவாள அசைவுக்கேற்பப் பாய்ந்து ஓடும்.

காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு அலைபேசியில் கதைத்துக் கொண்டு சாலையில் 
அதுவும் ஒரு வழிப் பாதையில் எல்லை மீறிய வேகத்துடன் பயணிப்பதில் இளைய சமுதாயம் மற்றும் முதியவர்களும் கூட மதி கெட்டு விபத்து ஏற்படுத்தி மரணிப்பவன் அல்லது படுகாயம் அடைபவன் குற்றவாளி

தப்பிப்பவன்தான் எம அதர்ம ராஜனோ?

கடிவாளம் இல்லாத கண் கட்டாத குதிரையும் வாழ்க்கை, வணிகம் மற்றும் வாகனப் பயணமும் அக்கம் பக்கம் பார்க்காமல் போனால்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!