இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஞான தேசிகன் சித்தர்

ஈரோடு மண்ணுக்கு நான் வந்தபோது எனது மைத்துனரின் சித்த மருத்துவ ஆசானாக அறிமுகம் ஆனவர்தாம் திரு ஞான தேசிகன் அவர்கள்.  அவரது மருத்துவ வித்தை குறித்தும் அவரிடமுள்ள ஆன்மீக சக்தி பற்றியும் எனது மைத்துனர் வாயிலாக அறியத் துவங்கிய நான் ஒரு நாள் அவரைச் சந்திப்பதற்காக அவரது சித்த மருத்துவமனை அமைந்திருந்த சிவன் மலை அடிவாரத்திற்குச் சென்றேன். என்னை ஒரு மகனைப் போல அன்பு காட்டி வரவேற்ற அவரை இரண்டாவது முறையாக நான் சந்தித்தபோதுதான் என்னை அறியாமலேயே அவரது வழி காட்டுதலுக்கு ஆளாகத் துவங்கினேன்.  இரண்டாவது முறை என்று நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் நான் முதன் முறையாக அவரைச் சந்தித்ததே கன்னியாகுமரியில்தாம். அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்ததற்கு முதல்நாள் எனது துணைவியின் அத்தை மகன் ராஜ்குமார் திருச்சியில் இருந்து என்னைக் காண்பதற்காக கருவூர் வந்திருந்தார்.  நான் அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது எனது மூத்த மைத்துனர் குடும்பத்துடன் எனது துணைவியும் தவசி அவர்களுடன் கன்னியாகுமரிக்கு ஆன்மீகப் பயணமாகச் சென்று இருப்பதைப் பற்றி நான் எடுத்துரைத்து அதோடு விடாமல் நாம் இருவரும் கன்னியாகுமரிக்குச் செல்வோமா எனக் கேட்க

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா

இந்தப் பாடல் வரிகள் கொடுக்கும் உத்வேகம் முற்றிலும் எனக்காகவே என்றே நான் நினைக்கிறேன்.  மக்கள் திலகத்தை அறவே பிடிக்காத என்னை என் இளமையில் உறவினர் எவரோ வலுக்கட்டாயமாக இந்தத் திரைப்படம் பார்க்க என்னை அழைத்துச் சென்றது இன்றும் என் மனதில் நிழலாடுகிறது. அப்பொழுது எங்கள் ஊரில் இருந்த ஒரே திரை அரங்கின் பெயர் புஷ்பா டூரிங் டாக்கீஸ். இது என் பெரியப்பா திரு. துளசிபிள்ளை அவர்களின் சம்பந்தியும் என் மனம் கவர்ந்த சகோதரி சிங்காரவேல் ராஜேஸ்வரியின் மாமனார் MR என்று அழைக்கப்பட திரு.ராமசாமி அவர்களால் நடத்தப் பட்ட திரை அரங்கம். அன்றைய தினம் இந்தப் படத்தைப் பார்க்க எங்கள் ஊர் மட்டுமன்றி சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரண்டு வந்திருந்த மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கூட்டம் மூன்று மடங்காகத் திரண்டிருந்த காரணத்தால் எங்களால் திரை அரங்கு உள்ளே செல்ல இயலாமல் போனது. எனினும் நாங்கள் வெகு நேரம் அங்கே வெளியில் இருந்தவாறு படத்தின் கதை வசனத்தைக் கேட்டவாறு இருந்தோம். படம் முழுக்க திரை அரங்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த ஆரவாரம். விசில் சப்தம் காதைக் கிழிக்க அதையும் தாண்டி அதிக வால்யூமுடன் இந்தப் பாடல் இன்றும் என் காதுகளி

ஊழலில் உதிர்ந்த மலர்கள்

நேற்று காலை எனது 10 வயதில் கல்வி பயின்ற ஐந்தாம் வகுப்பு தொடக்கப் பள்ளியை கடந்து செல்லும்போது என்னை அறியாமல் அங்கு ஒருகணம் நின்று விட்டேன்  என் கண்களில் முதலில் பட்டது நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது இருந்த கட்டிடம் இந்த கட்டிடம் எனது ஐந்து வயதில் கட்டப்பட்டது  அதாவது கிட்டத்தட்ட 55 ஆண்டுகள் கடந்தும் இன்றும் பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்தது இதனைக் கட்டியவர் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் இருந்த ஒரு கட்டுமான ஒப்பந்ததாரர்  அதற்கு அருகிலேயே இரண்டுமுறை இழுத்துக் கட்டப்பட்டு தற்போது வட்டார கல்வி அலுவலர் அலுவலகமாக செயல்படும் பார்க்க வெளிப்பூச்சு அழகாக தோன்றும் உள்ளே உளுத்துப்போன ஊழல் கட்டுமானக் கட்டிடம் ஒன்றும் காட்சியளித்தது  நான் பெரும்பாலும் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள அரசு கட்டிடங்களின் நிலையைத்தான் கவனிப்பது வழக்கம்  இந்தக் கட்டிடங்களில் வெள்ளையர்கள் ஆண்ட போதும் வெளியேறிய நாள் வரை கட்டப்பட்டு இன்று வரையும் கூட உறுதியாக நிற்கும் கட்டிடங்களையும் காண்பேன்  பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் நாடு இருந்த வறிய நிலைக்கு ஏற்ப குறைந்த வரி ஆதாரத்தில் எளிமையாகக் கட்டப்பட்ட கட்டிடங்களையும்

தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் ஒரு ஒப்புமை

நம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர் யார் என்று அறியாதவர்களே மிக அதிகம் அதே போன்ற நிலைதான் வடக்கிலும் தேசிய கீதம் பாடியவர் யார் என்று அறியாதவர்களும் பெரும்பான்மை ஆக இருக்கக் கூடும். முன்னதை நான் ஈரோட்டில் ஒரு ஆய்வின் வாயிலாக அறிய முடிந்தது பின்னதை ஜெய் கிண்டியா ஆட்கள்தாம் ஆய்வு செய்து அறிவு தெளிதல் வேண்டும். தலைப்புக்கு உள்ள விளக்கம் இங்கு யாதெனில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலிலும் தேசிய கீதப் பாடலிலும் பரத கண்டம் பாரத என்ற சொல்லே இடம் பெற்று உள்ளது என் ஆய்வின்படி கவுரவர் பாண்டவர் யுத்தம் இன்னும் முடிவு பெறவே இல்லை கவுரவர் ஆரிய இனம் பாண்டவர் தமிழர் வரலாறு தன்னையே திருப்பிக் காட்டும் போது இந்த உண்மையும் வெளிச்சத்துக்கு வந்தே தீரும் அகண்ட(மகா வட மொழி)பாரதம்  முழுவதும் அற தெய்வமாம் தமிழ்அன்னையின் ஆட்சியின் கீழ் வரும். இது காலத்தின் கட்டாயம் அவாளுக்கு கலி யுகம் முடியும் காலம்  வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது வேங்கை யாரடா அது சோழப் பேரரசின் மாமன்னன் முருகன்தானடா

கணினி வேலை செய்யும் பெண்களின் கனிவான கவனத்திற்கு

என்னுடைய 45 வயது முதல் தற்போது வரை சொந்த வணிகத்தில் இருந்து விட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை. இது வரை எட்டு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளேன். இங்கு பணியாற்றிய சக இளைய சமுதாயப் பெண்கள் அனைவருமே பின் வரும் தவறுகளைச் செய்து வருவதை நான் வேதனையுடன் அனுமானித்து வந்துள்ளேன். தங்களுக்கு ஒதுக்கி உள்ள கணினிகளை விசைப் பலகை உட்பட தினசரி வேலை துவக்கும் முன்பு சுத்தம் செய்தல் கிடையாது. நாட்கணக்கில் இவை தூசு படிந்த நிலையில் அப்படியே பயன்படுத்துவர். தாங்கள் அமரும் இருக்கையைக்கூடச் சுத்தம் செய்தல் கிடையாது. மேலும் துப்புரவுப் பணியாளர் வரவில்லை அல்லது அவர் வரத் தாமதம் ஆனால் தங்களின் இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு அமர்ந்து பணி செய்வதும் கிடையாது. கோப்புகளைப் பராமரிப்பதில் கூட இதே நிலை. தூசு பறக்கும். மேலும் கணினியில் தாங்கள் செய்யும் வேலைகளை முறையாக ஒரு கோப்பில் இட்டுப் பராமரிப்பதும் கிடையாது. சக நண்பர்களுடன் அரட்டை அடிப்பதும் அதன் காரணமாக அதி அவசியமான வேலைகளை அரை குறையாகச் செய்து உரிமையாளர் அல்லது மேலாளர்கள் வசம் திட்டு வாங்குவதும்  போதாக்குறைக்கு கைபேசியில் மணிக்கணக்கில் தேவையற்ற அரட்டை அடிப்

சங்கு ஊதுவது உங்களுக்காகவும் இருக்க வேண்டாமே

நேற்று மதியம் இரண்டு முப்பது மணி அளவில் என்னுடைய மகளின் கல்விப்பணி வேலை காரணமாக ஈரோடு நகரில் இருந்து  வள்ளி புரத்தான்பாளையம் வரை செல்ல வேண்டி இருந்தது  என்னுடைய வாகனம் கரூர் பெருந்துறை புறவழிச்சாலையைக் கடக்கும் முன்பு சைரன் என்ற சங்கு ஊதும் சத்தம் கேட்டது சாலையைக் கடக்காமல் வாகனத்தை நிறுத்திவிட்டு கிழக்கு திசையை நோக்கிப் பார்த்தால் யாரோ ஒரு தமிழக அமைச்சரின் வாகனம் வருவதை அறிவிப்பதற்காக ஒரு காவல்துறை வாகனம் சங்கூதியபடி வந்தது.  அதனைத் தொடர்ந்து ஒரு அரசியல்வாதி வாகனம் அதற்கு அடுத்து அமைச்சரின் வாகனம் இதற்குப் பின் சில எடுபிடிகள் வாகனம் கடைசியாக சேலம் மாநகர ரோந்துப் பணி வாகனம் வந்து இந்த அணிவரிசை முடிவுக்கு வந்தது. அனைத்து வாகனங்களுமே 120 கிலோமீட்டர் வேகத்தில் தான் வந்தன. தமிழ்நாடு அரசின் 108 வாகனத்தில் நூறில் சென்றால் 108 ல் தான் போக வேண்டும் என்ற வாசக வரிகள் தான் என் மனதில் ஓடியது காவல்துறை அன்பர்களே நண்பர்களே வேகக் கட்டுப்பாடு என்பது மக்களுக்கு மட்டும்தானா  மக்களுக்காக அரசியல்வாதிகளா அரசியல்வாதிகளுக்காக மக்களா இவ்வளவு வேகத்தில் அவர்கள் சென்று அடையப் போவது ஏதேனும் ஒரு ஓய்வு விடுதியில் த

தோல்வியா வெற்றியா

இரு நூற்று ஐம்பது பேர் வேலை செய்யும் இடத்தில் வேலை தேடிப் போனேன்  என்னைப் புரிந்து கொள்ளாத சிலரைத் தவிர மற்றவர்களின் நன் மதிப்பைப் பெற்று  சில நடைமுறைகள் பிடிக்காமல் 80 நாட்கள் கழித்து வெளியேறி விட்டேன் என்னைப் புரிந்து கொள்ளாதவர்களைப் பொறுத்தவரை நான் தோற்று ஓடியவனாக நினைக்கலாம் என்னைப் பொறுத்தவரை நான் அங்குள்ள பெரும்பாலானவர்களின் அன்பைச் சுமந்து வெற்றியாளனாக விடை பெற்றவன்

இனி ஒரு விதி செய்வோம்_வாக்குரிமை

தமிழ் நாடு வந்தாரை வாழவைக்கும் மண். இந்த மண்ணை ஆள இந்த மண் சார்ந்த மக்களுக்கே உரிமை உண்டு. இங்கு வந்து வாழும் பிற மாநில மொழி சார்ந்த மக்கள் இரண்டு வகையினர். ஒன்று காலம் காலமாக இருந்து வருபவர்கள்.  இரண்டாவது தங்கள் மாநிலத்தில் வாழ வழியின்றி தமிழகம் நோக்கிப் பஞ்சம் பிழைக்க வருபவர்கள். இவர்களுக்கு மத்திய மதவாத அரசின் ஒரே நாடு ஒரே ரேசன் என்ற கோட்பாடுக்கு மட்டுமே உரிமை தரலாம். வாக்களிக்கும் உரிமை இங்குள்ள ஆட்சி அதிகாரத்துக்கு போட்டியிடும் உரிமையை இனி அவர்கள் அனைவரும் கோர முடியாது என்று சட்டம் செய்வோம். அவர்கள் தாங்கள் பிறப்பெடுத்த மாநிலத்தில் அமைந்துள்ள சொந்த தொகுதியில் மட்டுமே இனி வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயச் சட்டம் கொண்டு வருவோம். இதற்காக இவர்கள் எல்லாம் சொந்த ஊருக்கு தேர்தல் காலத்தில் பயணிக்க வேண்டிய அவசியம் இன்றி அஞ்சல் வாக்காக தனக்கு விருப்பப்படும் வேட்பாளருக்கு அதாவது அவர்கள் மாநிலத்தில் உள்ள வேட்பாளருக்கு மட்டுமே இனி வாக்களிக்க முடியும். அதே போல அவர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பினால் தங்கள் மாநிலத்தில் உள்ள சொந்த தொகுதியில் அல்லது அங்குள்ள தனக்கு செல்வாக்கு மிக்க வேறு ஒரு இடத்

காப்பீட்டு நிறுவனங்கள் அறிவோம்

பயிர்க் காப்பீடு, வாகனக் காப்பீடு, உடமைக் காப்பீடு, வங்கிப் பணப் பாதுகாப்புக் காப்பீடு, இவை தவிர மனித உயிருக்கு வாழ்நாள் காப்பீடு, மனித உடலில் ஏற்படும் நோய்களுக்கும் காப்பீடு என இன்று உலகம் முழுவதும் காப்பீட்டு முறைத் திட்டங்கள் ஏராளமான அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டு அதற்கென ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருவதை நாம் அறிவோம். பாரத நாட்டில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஏராளமான வாடிக்கையாளர்களுடன் முதன்மை நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. வாகனக் காப்பீட்டில் தேசிய காப்பீட்டுக் கழகம் முன்னாட்களில் சிறப்புடனும் இன்றைய நாட்களில் பரிதாபம் ஆன நிலையிலும் உயிருக்குப் போராடி வந்துகொண்டிருக்கிறது. இந்த இரண்டு மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க இன்றைய மதவாத மத்திய அரசு வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றது. இது போன்ற காப்பீட்டு திட்டங்களின் நோக்கம் என்ன? இவை எப்படி செயல்படுகிறது என்பது பற்றிய அறிதலும் புரிதலும் இன்றைய நம் செம்மறி ஆட்டு மந்தைக் மக்கள் கூட்டத்திற்கு விளங்குவதில்லை என்றுதான் கருத வேண்டியுள்ளது. ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் முகவர்கள் அலைந்து திரிந்து மக்களை ஆயு

தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்

பழையன கழிதலும் புதியன புகுதலும் தமிழர் மரபு. இந்த மரபு இன்று தவறான புரிதலோடு போகி பண்டிகை அன்று பிளாஸ்டிக் குப்பைகளையும் டயர்களையும் எரித்து சுற்றுச் சூழலை நாசம் செய்யும் படித்த முட்டாள்கள் செய்யும் பகுத்தறிவு. இரு பெரும் ஊழல் திராவிட இயக்கங்களின் தலைவன்கள் யார் என்று தெரியாத  தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன்கள் எனும் இழி நிலை. சாதிய மதவாதக் கார்பொரேட் கும்பல் வேறு இந்தத் தாண்டல் கார அணிவரிசையில். கேட்கவா வேண்டும்? மக்களைச் செம்மறி ஆடுகள் ஆக்கி மேயும் காண்டாமிருக கூட்டங்கள். ஆளப் போரான் தமிழன் உலகம் எல்லாமே இந்த வரிசையில் முதல்வர் பதவிக்கு வரிசை கட்டி நிற்கும் கூத்தாடிகள் வேறு செம்மறி ஆட்டுப் பண்ணை நடத்தும் அவலம். பொறுப்பாரா தமிழ் அன்னை? என்னை வெள்ளாட்டு வேங்கையாக்கி இந்தச் செம்மறி ஆட்டுக் கூட்டத்தை ஒன்று படுத்து எனக் கட்டளை பிறப்பித்து இதோ இந்த வினாடி கூடத் தூங்க விடாது துரத்துகிகிரார். கடுகு மூட்டை சிதறிப் போனது போல இருக்கு இன்றைய தமிழ்ச் சமூகம். மலைப்பாக இருக்கிறது.  சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் முழங்கால் மட்டுமாம். வெல்லப் பிறந்தவனுக்கு இமயமும் ஓர் கடுகே. வசந்தத்தின் துவக்கம

மனிதவள மேலாளர் பதவி

மனம் தளராத விக்ரமாதித்தன் போல் மீண்டும் வேலைக்குச் செல்வது என முடிவெடுத்தேன். இதுவரை இருபது நபர்கள் எனக்கு கீழ் வேலை பார்த்த இடங்கள் போல் இன்றி 250 நபர்கள் வேலை செய்யும் இடத்தில் வேலை கேட்கப் போக இங்கே எனக்கு கிடைத்தது மனிதவள மேலாளர் என்ற பதவி.  மனித வளம் பற்றி ஏற்கனவே ஏராளமாகப் படித்துள்ளேன். இப்பொழுது கூட நூலகத்தில் எடுத்துவந்து படிக்க முடியாமல் இருக்கும் ஒப்பற்ற தமிழறிஞர் இளங்குமரனார் அவர்களின் தமிழ் வளம் என்ற புத்தகத்தில் வளம் பற்றிய கருத்துக்களை அவ்வப்போது படித்து வருகிறேன். நிறுவன உரிமையாளர் ஏற்கனவே இந்தப் பதவியில் இங்கு உள்ளவர்களிடம் விளக்கம் கேட்டு அதன்படி நீங்கள் வேலை செய்ய வேண்டும் என்றும், அவ்வப்போது காசாளர் மற்றும் பில் செய்யும் இடங்களில் உதவியாக இருக்க வேண்டும் என்றும் பணித்திருந்தார்.  ஆஹா எனக்கு ஓரளவுக்கு பரிச்சயமான ஆனால் முற்றிலும் புதிய பதவி என்று அகமகிழ்வுடன் என்னுடைய பணியைத் துவக்கினேன்.  இங்குதான் எனக்கு சிக்கலே ஆரம்பமாயிற்று. ஏற்கனவே இந்த பதவியில் இரண்டு நபர்கள் இருந்தனர். அவர்கள் என்னை தங்கள் பதவிக்குப் போட்டியாக வந்தவன் என்ற மனநிலையிலும் 59 வயதானவனுக்கு கணினி பற்

நிர்வாகச் சீர் திருத்தச் சிந்தனை

என்னுடைய 17 ஆவது வயதில் ஆட்டோமொபைல்ஸ் துறையில் அடியெடுத்து வைத்தேன். பெரிய பெரிய கனவுகள். வணிகத்தை விரிவு செய்யக் கணினி மயமாக்குதல், ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தல், ஏராளமான செல்வம் சேர்த்து உறவுகளுக்கும் மற்றவர்களுக்கும் உதவுதல் போன்ற எதிர்பார்ப்புகளுடன் தான் என்னுடைய வணிகத்தை துவக்கி இருந்தேன். கர்மவீரரின் நேர்மை குணம் என் இதயத்தில் நுழைந்து உடலெங்கும் இரத்த நாளங்கள் ஆகப் பரவி ரத்தம் போல் ஓயாது வேலை செய்து கொண்டிருந்தது.  எனினும் என்னுடைய கனவுகள் தகர்ந்து கடுமையான நட்டத்துடன் எனது நாற்பத்தி மூன்றாவது வயதில் வணிகம் ஒரு முடிவுக்கு வந்தது.  அடுத்த நாடோடிப் பயணம் ஈரோடு நோக்கி. இங்கு நான் வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் எழுந்தது. நானும் வேலைக்குச் செல்ல முடிவு செய்தேன். முதலில் பால் பண்ணையில் வேலை. அதற்கு என் உடல்நிலை ஒத்து வராததால் எழுதுபொருள் விற்பனை அங்காடியில் வேலை. என்னைப் புரிந்து கொள்ளாத மற்றவர்களால் அடுத்தடுத்து வேறு வேறு நிறுவனங்களில் வேலை செய்ய விதி அழைத்துச் சென்றது.  வணிகத்தில்அடிபட்ட நிலையிலும் நான் வேலைக்குச் சென்ற இடங்களில் எல்லாம் அங்குள்ள குறைகளை முத

காவல்துறை சீர்திருத்தங்கள் பகுதி 1

காவல் நிலையங்களில் காவல் நிலையங்களில் இனி லாக்கப் முறை அடியோடு ஒழிக்கப்படும் குற்றவாளிகளை கைது செய்தவுடன் அவர்களை நேரடியாக அருகிலுள்ள அற மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் கைதியின் கூடவே அவரது உறவினர் ஒருவர் நண்பர் இருவர் என குறைந்தது நான்கு பேராவது உடன் வர வேண்டும் அறமன்ற நடுவரிடம் கைதியின் உறவினர்கள் காவல்துறையினர் கைதியை அடிக்க வில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு அவர்கள் வீடு திரும்ப காவல்துறையே  வாகன வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் ஒவ்வொரு காவல் நிலையம் முன்பும் மிகப் பெரிய டிஜிட்டல் திரை அமைத்து காவல் நிலைய செயல்பாடுகள் வெளிப்படையாக வெளியே உள்ள மக்கள் அறியும் வகை உருவாக்கப்படும் காட்டுமிராண்டி சாத்தான்குள காவல் நிலைய சம்பவங்கள் இனி தமிழ்நாட்டில் நிகழவே போவதில்லை

கல்விமுறையில் மாற்றங்கள் பாகம் 5

இனி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் கல்வி மட்டுமே கட்டாயமாக்கப்படும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் தனித்திறன் கண்டறியும் பயிற்சிகளுடன் ஆங்கிலமும் விருப்பப்படும் மாணவர்களுக்கு அவரவர் தாய் மொழிகளில்  கற்பதற்கு தேவையான ஆசிரியர்களுடன் கூடிய கல்விமுறை உருவாக்கப்படும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்களின் தனித்த அவர்களுக்கு விருப்பமான பாடப் பிரிவுகள் மட்டுமே கற்றுத்தரப்படும் சித்த மருத்துவம் மட்டுமே பிரதானமான மருத்துவக்கல்வி ஆகவும் அத்துடன் அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ள மருத்துவ கருவிகளை கையாண்டு சித்த மருந்துகள் மட்டுமே மக்களுக்கு போதிக்கக்கூடிய கல்விமுறையை ஏற்படுத்தப்படும் இவ்வாறு பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக திகழ அடிப்படை அடிக்கட்டுமானம் ஆக மட்டுமே இனி தமிழக கல்வி முறையை மாற்றி அமைப்போம் அதோடு மட்டுமன்றி இன்றைய தமிழ் சமுதாயம் தங்களின் உழைப்பின் பெரும்பகுதியை தங்கள் பிள்ளைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்படுவதால் இனி அரசாங்கமே குழந்தைகளை படித்து பகுத்தறிவுடன் வாழக்கூடிய வழிமுறைகளையும் ஏற்பட

கல்வி முறையில் மாற்றங்கள் பாகம்-4 உலகத்தர கல்வி

மாணவர்கள் இனி ஐந்து வயதில் மட்டுமே கல்வி கற்க பள்ளியில் அனுமதிக்கப்படுவர் கல்விக்கூடங்களில் தற்போது உள்ள சோதனைக் கூடங்கள் அகற்றப்படும் உலகத்தரத்தில் விளையாட்டு மைதானம் உலகத்தரத்தில் கல்விக் கூடங்கள் நல்ல காற்றோட்ட வசதி மேம்படுத்தப்பட்ட கட்டிடங்கள் இங்கு இனி தமிழர்தம் கலை சிற்பம் ஓவியம் சிலம்பம் பரதம் என பல தரப்பட்ட கலைகள் கற்கும் இடங்களாக மாற்றம் செய்யப்படும் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் இந்த பேருந்தில் மாணவச் செல்வங்கள் பாதுகாப்புடன் பயணித்து காவல்நிலையம் வங்கிகள் ரயில் பேருந்து விமான நிலையங்கள் அறமன்றங்கள்  தொழிற்சாலைகள்  போன்ற இடங்களுக்குச் சென்று அங்கு உள்ள நடைமுறைகள் கண்டு பயிலவும் அறிவு பெறவும் தேவையான வழிமுறைகள் ஏற்படுத்தப்படும் அதே போல பெரிய நிறுவனப் பேருந்துகள் மாணவர்களைப் பள்ளிக்கு வந்து அழைத்துச் சென்று அங்கு அவர்கள் நிறுவனச் செயல்பாடுகளை கற்றுத் தரும் வழிமுறைகள் கட்டமைக்கப்படும்

கல்வி முறையில் மாற்றங்கள் பாகம் 3 தனித் திறன் வளர்த்தல்

கல்விக்கூடங்களில் இனி பழைய மனப்பாட பாட முறைகள் முற்றிலும் தடை செய்யப்படும் மாணவர்களின் தனித் திறமைகள் வெளிப்படும் வண்ணம் பாடத் திட்டங்கள் அமைக்கப்படும்  எப்படி என்றால் ஒரு மாணவனுக்கு அறிவியல்தான் பிடிக்கிறது என்றால் அவன் அதற்கான படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் வண்ணம் அவனது கல்வி முறை அவனுக்கு அமைத்து தரப்படும் ஒரு மாணவனுக்கு விளையாட்டு தான் பிடிக்கும் என்றால் அவனுக்கு கல்வி இரண்டாம் விருப்பமாகவும் விளையாட்டு முதல் விருப்பமாகவும் மட்டுமே இனி திகழும் இதற்கு ஏற்ப மாணவன் கல்விக்கூடத்தில் அடியெடுத்து வைத்த நாளில் துவங்கி அவனுடைய எதிர்கால வாழ்க்கை விருப்பம் லட்சியம் தனித்திறமை என்னவென்று அடையாளம் காணப்பட்டு அதன் அடிப்படையில் மட்டுமே அவனது கல்விமுறை இனி அவன் விருப்பத்திற்கு ஏற்ப அமையுமாறு வழிவகைகள் ஏற்படுத்தப்படும் இதனால் ஏற்படும் நன்மைகள் என்னவென்றால் பெற்றோரின் விருப்பம் பிள்ளைகள் மேல் திணிக்கப்படுதல்  மாணவர்களின் மன உளைச்சல்கள் தற்கொலை எண்ணங்கள் வீணான சிந்தனைகள் போன்ற அனைத்தும் மறையும் வண்ணம் அவனது வாழ்க்கை முறை இனி அமையும்

கல்வி முறையில் மாற்றங்கள் பாகம் 2 நாகரீகப் பரிவர்த்தனை

தமிழக கல்வி கூடங்களில் வெளிமாநில வெளிநாட்டு மாணவச் செல்வங்கள் வரவழைக்கப்பட்டு நம் பள்ளி மாணவர்களுடன் சில வாரங்கள் செலவிட்டு நம் கல்வி முறையை கண்டு பயன் பெற வழிமுறை ஏற்படுத்தப்படும் அதே போன்று நல்ல தகுதியும் திறமையும் உள்ள தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்கள் வெளிநாடுகள் சென்று அங்கு அவர்கள் சில வாரங்கள் தங்கி அங்குள்ள நடைமுறைகளைப் பயின்று வர அனுமதிக்கப் படுவார்கள்  குறிப்பாக பாகிஸ்தான் சீனா போன்ற பகை நாடுகள் ஆக கருதப்படும் நாடுகளின் மாணவச் செல்வங்கள்  இங்கு வந்து சில வாரங்கள் தங்கி இருந்து நம் கல்விமுறையின் நடைமுறைகளை பெற்று பயனடையும் வண்ணம் வழிவகைகள் செய்யப்படுவதால் அண்டை நாடுகளுடன் நிலவும் பகை உணர்வுகள் குறைந்து அமைதியும் அன்பும் சமாதானமும் நல்லிணக்கமும் உருவாகும் வழிமுறைகள் மேம்படுத்தப்படும் இதற்கேற்ப புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உலக நாடுகள் அனைத்துடனும் உடனடியாக செய்து கொள்ளப்படும்

கல்வி முறையில் மாற்றங்கள் பாகம் 1 குருகுலக் கல்வி முறை

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் கல்விக்கூடங்களும் அரசுடமை ஆக்கப்படும்   கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட கல்விக்கூடங்கள் உடன் இணைந்து அவர்களின் தங்குமிடங்கள் கட்டப்படும் அனைத்து வசதிகளுடன் கட்டப்படும் இந்த தங்கும் இடங்களில் மட்டுமே இனி பணிபுரியும் ஆசிரிய பெருமக்கள் தங்கி பணியாற்ற வேண்டும் என்று கட்டாய விதி உருவாக்கப்படும்  மேலும் ஆண்டுக்கு ஒருமுறை இவர்கள் வேறு வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவர் அதற்கு தகுந்தார்போல் தங்களுடைய வாழ்க்கை முறையை இவர்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும்  அதேபோன்று அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவ செல்வங்களுக்கும் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டு பள்ளியில் சேரும் ஒவ்வொரு மாணவரும் அங்கேயே தங்கி படித்து முன்னேறும் வழிமுறைகள் உருவாக்கப்படும் இந்த மாணவர்களும் ஆண்டிற்கு ஒரு முறை வேறு வேறு பள்ளிகளில் படிக்கும் வண்ணம் இடமாற்றம் செய்யப்படுவர் உதாரணத்திற்கு ஒரு மாணவன் சொந்த ஊர் நாமக்கல் என்றால் ஒரு ஆண்டு அங்கு அடுத்த ஆண்டு கொடைக்கானல் அடுத்த ஆண்டு தருமபுரி என மாறி மாறி பல்வேறு நில அமைப்பு பல்வேறு இன மொழி சார்ந்த மாணவச் செல்வங்கள் உடன் கலந

இதயத்தை விலையாய் கொடுத்துவிட்டு அன்பினை வாங்கப் பிறந்து விட்டேன்

செல்வம் சேர்த்தல் என்பது என் இலக்காக இருந்தே இல்லை. பணம்  உள்ளவர்களிடம் இருக்கும் அகந்தை குணாதிசயங்கள் என்னிடம் வளர நான் அனுமதித்தது கிடையாது.  இளம் வயதில் வறுமை நிலையினை அங்குலம் அங்குலமாக அனுபவித்தவன் நான். சொந்த ஊரை விட்டு நாடோடியாகிப் பல ஆண்டுகள் கடந்தும் 100 கல் தொலைவில் இருந்தும் உறவுகளைப் பிரிந்த தவிப்பும் அன்பும் அவர்கள் உதாசீனம் காட்டியபோதும் மாறவே இல்லை.  சிறு கோபம் வந்தாலும் அவர்கள் குணம் அப்படியே இருக்கட்டும்.  நாம் நமக்குள் எழும் கோப எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சமாதானம் ஆவேன். ஏராளமாகப் பணம் புரளும் வணிகம் செய்தபோதும் எனக்கெனச் செலவிட்ட தொகை மாதம் நூறு ரூபாய்களை தாண்டியதில்லை. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவன் தொழிலாளி என்ற தமிழன்னையின் பாடல் வரிகளுக்கேற்ப இன்று வரை வாழ்ந்து வருபவன். நான் எவருக்கும் போட்டியாகவும் ஓடவில்லை. எவர் வாழ்வையும் பொறாமையாகப் பார்த்ததும் இல்லை. எவர் வாழ்வையும் கெடுத்ததும் இல்லை. வணிகத்தில் பட்ட கடனை அடைக்க என் வாழ் நாள் முடிவதற்குள் என்னை வழி நடத்தும் மகா சக்தி ஆற்றல் தரும் என்ற நம்பிக்கையை நெஞ்சில் சுமப்பவன் நான். எ

நான் கடவுளைக் கண்டேன்! ஷர்மிளா

நான் கடவுளைக் கண்டேன்!  ஒரு குழந்தை வடிவிலே!! அவன் கருணையைக் கண்டேன்!!!  கொஞ்சும் மழலை வடிவிலே!!!! அவள் ஒரு சாலை ஓரம் வசிக்கும் குடும்பச் சிறுமி. ஒரு நாள் என் எதிரே அவள் வந்தபோது என்னிடமிருந்த 3 ரூ பிஸ்கட்டைக் கொடுக்க மகிழ்வுடன் பெற்றாள். இன்று மீண்டும் நான் அவளை அழைத்து அதே பிஸ்கட்டை பால் வழங்கும் அங்காடியில் வாங்கிக் கொடுத்தேன். பெற்றுக்கொண்டு சாலையைக் கடந்த அவள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு நாய்க் குட்டியிடம் கொஞ்சியவாரே அந்த பிஸ்கட்டை புகட்டத் தொடங்கினாள். என் விழிகள் கசிந்தன. இன்னும் இந்தத் தமிழ் மண்ணில் அன்புக்குப் பஞ்சமில்லை. தமிழன்னை எங்களை என்றும் அன்போடு வாழ வைப்பார்!!!!! அவரே உலகின் கருணைத் தாய்!!!!!! பின்குறிப்பு அந்தச் சிறுமியின் பெயர் ஷர்மிளா அவளது தந்தையின் தொழில் சோதிடம் பார்ப்பது  சாலையோரத்தில் அமைந்துள்ள புளியமரத்தின் அடியில் தான் அவர்கள் குடும்பம் வசித்து வருகிறது  மழை காலத்தில் இடி மின்னலில் அந்த குடும்பம் எப்படி தாக்குப் பிடிக்கும் என்பதுதான் என்னுடைய இப்போதைய கவலை வருவோர் போவோருக்கு எல்லாம் சோதிடம் சொல்பவரின் நிலை சாலையோர புளிய மரத்து அடி என்பதுதான்  சாதகம் பா

அக்கம் பக்கம் பாக்காதே

வீடும் உறவும் நட்பும் புரிதல் இன்றிப் பணம் சேர்க்க வக்கும் தொழில் செய்யத் திறமையும் இல்லாதவன் என்று முடித்துக் கட்டி என்னைச் சோக முகம் காட்டி வாழு என்கிறது நானோ அங்கே சோகம் வீட்டை விட்டு வெளியே வந்தால் வேலைக்குச் செல்லும் போதும் ராஜா என்னைப் போல மகிழ்சியாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஒருவரும் காணேன்  என் எதிரே துக்கம் சுமந்த முகங்கள் எந்நேரமும் வீடு பணம் வணிகம் கடன் பற்றிய சிந்தனை சுமந்து விழிப்புணர்வு அற்ற நிலையில் கடக்கும் முகங்கள் உறவுகள் நட்புகள் என் எதிரே கடந்தாலும் நான்தான் அவர்களைக் கண்டு அழைப்பேன் அவர்களோ சிந்தனை தோய்ந்த முகத்துடன் விழிப்புணர்வு அற்ற நிலையில் பயணிப்பர் இதில் விதி விலக்கானவர்கள் காதலர்கள் ஆண் அல்லது பெண் நண்பர்கள் இணைந்து செல்லும் போதும் அலை பேசியில் கதைத்துக் கொண்டும் முகம் மகிழ்ந்த பயணம். விபத்துகளும் தன் தவறு புரியாமல் சண்டைகளும் நடந்தேற  எந்த நேரமும் எதையோ சிந்தித்த நிலையில் பயணிப்பதே முக்கிய காரணம் வாகனத்தை இயக்கும்போது என் கவனம் எதிரே அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் பின்பக்கம் வருவோரை சைடு மிரர் வழியே கவனிப்பேன். எனினும் பின்னால் வர

பூங்காற்று திரும்புமா?

முதல் மரியாதை இந்தப் படம் நேற்று ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது நடிகர் திலகம் என்ற பூவிலிருந்து உதிர்ந்து என்றோ புத்தகத்தில் வைத்த தாழம்பூ மாடலாக இன்றும் நறுமணம் வீசிக் கொண்டிருக்கும்  ஒட்டுமொத்தக்  கலைஞர்களுக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துதல்களைச் சமர்ப்பிக்கிறேன்.  இந்தத் தமிழின வரலாற்றுப் பெட்டக ஓவியத்தை முழுமையாகப் பார்க்க வேண்டும் என்ற என் ஆவல் வணிகம் செய்தும் வேலை செய்தும் பிழைக்க வேண்டிய நிலை இனி எனக்குத் தேவையில்லை என்று  உறுதியான நம்பிக்கை கொண்டு துவக்கிய கலைப்பொருள் தயாரிப்புக்கூடம் பொது முடக்கத்தால் முடங்கிப் போன நிலையை  முடக்கிவிடாமல் வீட்டில் இருந்து தொடருவதால் இயலாமல் போனது. இந்தப் படத்தில் வரும்  பூங்காற்று திரும்புமா பாடலில் ஒரு வார்த்தைத் தொடர் வரும் எங்க சாமிக்கு மகுடம் ஏரணும் மதவாத ஊழல்வாதப் போலிச் சாமிகளின் மகுடங்கள் சாவடிக்கப்பட்டு  தமிழன்னையின் அழகு முகத்தில் வெற்றி மகுடம் சூட்டும் நாள் வெகு விரைவில்.  இளைய சமுதாயத்திற்கு என் கருத்துகள் ஏன்  ஏற்புடையதாக இல்லை என்று ஆய்வு செய்தேன். அப்பொழுதுதான் எனக்குப் புலனானது இவை அனைத்தும்  இன்றைய முன்னணிக் கதாநாயகர்கள்

பசுமை நிறைந்த நினைவுகளே ராம் கமால்

என்னை விட ஒரு வயது குறைவு நான் 11th SSLC ராம் கமால் 10th SSLC இருவரும் உறவும் நட்பும்   என் இளைய தமக்கை பிரேமா அக்கா கணவர் சம்பத் மாமாவின் தாய் மாமா அவர்களின் மகனாக அறிமுகம் ஆகாதவர் கமால். என் வகுப்புத் தோழனும் என் தாய் மாமாவின் மைத்துனரும் ஆன தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநர் ஆகப் பணி புரிந்த நண்பர் பாஸ்கரின் வீட்டுக்கு விளையாடச் செல்லும்போது எதிர் வீட்டில் கமால் குடும்பம் வசித்தது.  பள்ளியில் நான் என் நண்பர்கள் ரவீந்திரன் அண்ணாமலை அன்பழகன் நால்வர் அணி.  ரவீந்திரன் வீட்டுக்கும் பாஸ்கரின் வீட்டுக்கும் விளையாடச் செல்லும்போது அறிமுகம் ஆனவர் கமால்.  விளையாட்டுத் தோழன் இல்லை என்றாலும் பள்ளி இறுதி வகுப்புவரை எங்களுடன் படித்தவர் என்பதாலேயே எங்கள் நட்பு வளர்ந்தது. 17 வயதில் பிரிந்து என் 42 வயதில் இணைந்தது எம் நட்பு பிரிந்த நட்பு மீண்டும் இணைந்த போது  அவரின் தந்தை எங்களிடம் இல்லை. என்னுள் பகுத்தறிவுச் சுடர் பிரகாசிக்கத் தூண்டுதலாக இருந்தவர் கமாலின் தந்தையார் பெருமதிப்பிற்குரிய கிள்ளி வளவன் அவர்கள் மகுடம் சாவடி ஒன்றியப் பெருந்தலைவர் பதவியை அலங்கரித்து அரசியல் ஆதாயம் தேடாதவர் அ

கங்க்ராஜ்லேசன் காக்காப் பாள்யம் போலீஸ் ஸ்டேசன் VS கமலா அக்கா

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அறிமுகமானவர் கமலா அக்கா. எனது இரண்டு சகோதரிகள் மற்றும் தம்பி உட்பட நானும் அவர்களை அக்கா என்றே அழைப்பதுண்டு. எனது தாய்வழித் தாத்தா அமரர் கந்தசாமி அவர்களின் கடை அருகில் உள்ள கட்டிடத்தில் வாடகைக்குத் தனது தொழிலைச் செய்து வந்தவர் கமலா அக்காவின் கணவர். அவரது பெயரும் கந்தசாமிதாம். எப்பொழுது பார்க்க நேர்ந்தாலும் பளிச்சென்று சிரித்து புன்னகை பூக்கும் முகத்துக்குச் சொந்தக்காரர் கமலா அக்கா. எனது மூத்த சகோதரியின் வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்குக் குடியிருந்ததால் எங்கள் குடும்பம் அங்கு செல்லும்போதெல்லாம் எனது பெற்றோரை வாங்க சம்பந்தி என அன்போடு அழைத்துச் சாப்பிட்டுப் போக வேண்டும் என வற்புறுத்துவர் கணவன் மனைவி இருவரும். ஒரு சில நாட்களில் அவர்கள் தேநீர் அருந்தும் வேளையில் அவர்கள் வீட்டைக் கடக்க முற்பட்டால் தேநீர் அருந்த அழைத்துத் தட்டாமல் சில நாட்கள் நாங்கள் தேநீர் அருந்தியதும் உண்டு. அவர்களின் மூத்த பெண் வயதுக்கு வந்தபோது அவர்கள் வீட்டில் விருந்து சாப்பிட்டதுகூட இன்றும் என் நினைவில் ஆடும் நிகழ்வுகளில் ஒன்று. அவர்களின் மூத்த மகன் குமாருக்கு என்னை விட ஒரு வயதே அதிகம்.

அசசமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை கொரானா பய அச்சமென்பதில்லையே

புரட்சிக்கவி பாரதியின் எழுச்சிமிகுப் பாடலில் நான் கொரானா பய அச்சமென்பதில்லையே என்ற வரிகளைச் சேர்த்துள்ளேன். கொரானா உலகையே அச்சத்தின் உச்சத்தில் உறைய வைத்துள்ள ஒரு பெயர் தினமும் தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள், தெருவில் சுற்றும் நகராட்சிக் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் நாராசமாக ஒலிக்கப்பட்டும், எழுதப்பட்டும், மக்களை உயிர் பயத்தின் உச்சத்திற்கும் வெறுப்பின் மிச்சத்துக்கும் சென்றடைய வைத்த வைக்கின்ற வைக்கப் போகின்ற ஒரு ஒற்றைச் சொல் இந்த நாடு மதவாதத்தின் பிடியில். இந்து மதம் அழுத்தமாகக் கடவுள் உண்டென்றும் ராமர் ஒரு மகத்தான கடவுளென்றும் அறுதியிட்டுப் பறை சாற்றி கடுமையான எதிர்ப்பிற்கிடையிலும் பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது. நடந்த இடம் உத்தரப்பிரதேசம். அங்கிருந்த ஏவல்துறையும் தமிழகத்தைப் போலவே உச்சபட்ச அடிமைத்தனக் காவல் துறைதான். ஆனால் அது மதவாத வெறி மிக்க காவல்துறை. அதனால்தான் அங்கு சிறுபான்மையினரின் கருணைமிகு அன்னை தெரசாவாம் என்றெல்லாம் இன்றுவரை நம்பப்படும் காங்கிரசு ஆட்சி இருந்தபோதும், காங்கிரசார் அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட இந்து மதவாதிகள் என்பதால் வெளியில் பாதுகாப்புப் பாசாங்கும் உ