காப்பீட்டு நிறுவனங்கள் அறிவோம்

பயிர்க் காப்பீடு, வாகனக் காப்பீடு, உடமைக் காப்பீடு, வங்கிப் பணப் பாதுகாப்புக் காப்பீடு,

இவை தவிர மனித உயிருக்கு வாழ்நாள் காப்பீடு, மனித உடலில் ஏற்படும் நோய்களுக்கும் காப்பீடு என இன்று உலகம் முழுவதும் காப்பீட்டு முறைத் திட்டங்கள் ஏராளமான அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டு அதற்கென ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருவதை நாம் அறிவோம்.

பாரத நாட்டில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஏராளமான வாடிக்கையாளர்களுடன் முதன்மை நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

வாகனக் காப்பீட்டில் தேசிய காப்பீட்டுக் கழகம் முன்னாட்களில் சிறப்புடனும் இன்றைய நாட்களில் பரிதாபம் ஆன நிலையிலும் உயிருக்குப் போராடி வந்துகொண்டிருக்கிறது.

இந்த இரண்டு மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க இன்றைய மதவாத மத்திய அரசு வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றது.

இது போன்ற காப்பீட்டு திட்டங்களின் நோக்கம் என்ன? இவை எப்படி செயல்படுகிறது என்பது பற்றிய அறிதலும் புரிதலும் இன்றைய நம் செம்மறி ஆட்டு மந்தைக் மக்கள் கூட்டத்திற்கு விளங்குவதில்லை என்றுதான் கருத வேண்டியுள்ளது.

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் முகவர்கள் அலைந்து திரிந்து மக்களை ஆயுள் காப்பீடு முறைக்கு கொண்டுவந்து அதை நடைமுறைப்படுத்துவதற்கு இங்குள்ள ஏராளமான அலுவல் சார்ந்த பணியாளர்கள் சரியான ஒத்துழைப்பு தருகிறார்களா என்றால் இல்லை என்ற பதில்தான் ஏராளம் ஏராளம். 

உதாரணத்திற்கு நான் 50 ஆயிரம் ரூபாய் அளவுக்கு ஆயுள் காப்பீடு செய்துள்ளேன் இந்த காப்பீட்டு திட்டத்தில் என்னுடைய சேமிப்பில் உள்ள ஒரு தொகைக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு அளவிற்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் கடன் பெற்று உள்ளேன்.

இந்தக் கடனை நான் என்னுடைய சில தேவைகளுக்காக அவ்வப்போது அதிகப்படுத்தி வந்துள்ளேன்

இந்த கணக்கு எந்த அளவுக்கு உள்ளது நான் எவ்வளவு கடன் வாங்கி உள்ளேன் என்பதை என்னுடைய வங்கி கணக்கு மூலமாக கூட நாம் அறிந்து கொள்ள முடியும் ஆனால் அதே சமயம் நான் ஒரு பாமர மனிதன் என்று வைத்துக்கொள்வோம் வங்கி நடைமுறைகள் பற்றி ஏதும் அறியாதவன் நான் என்று வைத்துக்கள்வோம் இந்த நிலையில் நான்
 ஆயுள் காப்பீட்டு நிறுவன கிளையில் உள்ள கடன் சார்ந்த அலுவலர்களிடம் அல்லது என்னுடைய முகவரி டமோ விசாரித்தால் எரிந்து விழும் போக்கும் இங்கே போ அங்கே போ என ஒவ்வொரு செக்சன் ஆக அலைய விடுவதும் அங்கு சென்றால் அங்குள்ள ஊழியர்கள் தங்களுக்குள் அரட்டை அடித்துக்கொண்டு அலட்சியமாக நீண்ட நேரம் காக்க வைத்து சில நேரங்களில் பதில் சொல்கிறார்கள் சில நேரங்களில் இப்போது முடியாது நீ நாளை வா என்று துரத்தி விடுகிறார்கள்.

வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்யாத சோம்பேறிகள் நிறைந்த உலகம் இது.

ஆயுள் காப்பீடு மற்றும் வாகன காப்பீடு போன்ற திட்டங்களில் மக்கள் கோடிக்கணக்கில் இணைந்து கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்கின்றனர் இந்தப் பணத்தில் 20 சதவீதம் பேருக்கு தான் உடனடி ஆயுள் காப்பீட்டு பலன்கள் சென்று சேர்கின்றன மீதமுள்ள 80 சதம் பேருக்கு அவர்களின் பாலிசி முடியும் காலத்தில் கிடைக்கின்றன
வாகனக் காப்பீட்டிலோ இவை ஆண்டுக்காண்டு புதுப்பிக்கப்படும். வாகன காப்பீடு பெற்ற அனைவருக்கும் இந்தத் தொகை கிடைக்கவே கிடைக்காது இதிலும் 20 சதம் அளவுக்குத்தான் விபத்து போன்றவற்றால் காப்பீட்டுத்தொகை கிடைக்கின்றது.
ஆயுள் காப்பீடு வாகனக் காப்பீடு மற்ற இதர பிற காப்பீடு களிலும் உள்ள நிலை இதுவேதான்.
காப்பீட்டு நிறுவனங்கள் தாங்கள் பெறும் ஏராளமான முதலீடு தொகையினை பொது துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்து வருமானம் ஈட்டி அதில் சில தொகைகளை வாடிக்கையாளர்களுக்கு திரும்பச் செலுத்தவும் முடியும்.

அதுதான் இப்போதுள்ள நடைமுறையும் கூட.

ஆக காப்பீட்டு நிறுவனங்கள் தங்களிடம் மக்களிடம் பெறப்பட்ட தொகையை முதலீடு செய்து அதில் வரும் லாபத்தை மட்டுமே மக்களுக்கு குறிப்பாக 20 சதம் பேருக்கு மட்டுமே கொடுத்து வருகிறது

மீதமுள்ள தொகைகள் அனைத்தும் காப்பீட்டு நிறுவனங்களின் கட்டிடங்கள் கட்ட அலங்கரிக்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ஊதாரித்தனமான ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்கவே பயன்படுத்துகின்றன.

இந்த லட்சணத்தில் தான் புற்றீசல் போல கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான காப்பீட்டு நிறுவனங்கள். இவைதவிர இணையத்தில் போலியாக உலாவும் தில்லு முல்லு அரசியல்வாதிகளின் அடியாட்கள் துவங்கியுள்ள நிறுவனங்கள்.

அரசுக்கே தெரிந்தும் தெரியாததுபோல் விளம்பரங்கள் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்று சப்பைக்கட்டு 

மக்களின் உழைப்பில் செய்யும் விளம்பரங்கள் இவையெல்லாம் கேலிக்கூத்து நாட்டில் நடக்கும் தில்லுமுல்லுகள் இப்படித்தான்.

குளிரூட்டப்பட்ட அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு அலட்சியமாக மக்கள் வரிப்பணத்தில் வயிறு வளர்க்கும் கூட்டம்.

வாகன காப்பீடு தில்லு முல்லு பேர்வழிகளுக்கே தில்லு முல்லு முகவர்களால் செல்கிறது.

அப்பாவி மக்கள் இது போன்ற காப்பீடுகளில் உரிய பலன் அடைவதில்லை என்பதுதான் அறம் சார்ந்த உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!