இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கங்க்ராஜ்லேசன் காக்காப் பாள்யம் போலீஸ் ஸ்டேசன் VS கமலா அக்கா

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அறிமுகமானவர் கமலா அக்கா. எனது இரண்டு சகோதரிகள் மற்றும் தம்பி உட்பட நானும் அவர்களை அக்கா என்றே அழைப்பதுண்டு. எனது தாய்வழித் தாத்தா அமரர் கந்தசாமி அவர்களின் கடை அருகில் உள்ள கட்டிடத்தில் வாடகைக்குத் தனது தொழிலைச் செய்து வந்தவர் கமலா அக்காவின் கணவர். அவரது பெயரும் கந்தசாமிதாம். எப்பொழுது பார்க்க நேர்ந்தாலும் பளிச்சென்று சிரித்து புன்னகை பூக்கும் முகத்துக்குச் சொந்தக்காரர் கமலா அக்கா. எனது மூத்த சகோதரியின் வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்குக் குடியிருந்ததால் எங்கள் குடும்பம் அங்கு செல்லும்போதெல்லாம் எனது பெற்றோரை வாங்க சம்பந்தி என அன்போடு அழைத்துச் சாப்பிட்டுப் போக வேண்டும் என வற்புறுத்துவர் கணவன் மனைவி இருவரும். ஒரு சில நாட்களில் அவர்கள் தேநீர் அருந்தும் வேளையில் அவர்கள் வீட்டைக் கடக்க முற்பட்டால் தேநீர் அருந்த அழைத்துத் தட்டாமல் சில நாட்கள் நாங்கள் தேநீர் அருந்தியதும் உண்டு. அவர்களின் மூத்த பெண் வயதுக்கு வந்தபோது அவர்கள் வீட்டில் விருந்து சாப்பிட்டதுகூட இன்றும் என் நினைவில் ஆடும் நிகழ்வுகளில் ஒன்று. அவர்களின் மூத்த மகன் குமாருக்கு என்னை விட ஒரு வயதே அதிகம்.

அசசமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை கொரானா பய அச்சமென்பதில்லையே

புரட்சிக்கவி பாரதியின் எழுச்சிமிகுப் பாடலில் நான் கொரானா பய அச்சமென்பதில்லையே என்ற வரிகளைச் சேர்த்துள்ளேன். கொரானா உலகையே அச்சத்தின் உச்சத்தில் உறைய வைத்துள்ள ஒரு பெயர் தினமும் தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள், தெருவில் சுற்றும் நகராட்சிக் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் நாராசமாக ஒலிக்கப்பட்டும், எழுதப்பட்டும், மக்களை உயிர் பயத்தின் உச்சத்திற்கும் வெறுப்பின் மிச்சத்துக்கும் சென்றடைய வைத்த வைக்கின்ற வைக்கப் போகின்ற ஒரு ஒற்றைச் சொல் இந்த நாடு மதவாதத்தின் பிடியில். இந்து மதம் அழுத்தமாகக் கடவுள் உண்டென்றும் ராமர் ஒரு மகத்தான கடவுளென்றும் அறுதியிட்டுப் பறை சாற்றி கடுமையான எதிர்ப்பிற்கிடையிலும் பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது. நடந்த இடம் உத்தரப்பிரதேசம். அங்கிருந்த ஏவல்துறையும் தமிழகத்தைப் போலவே உச்சபட்ச அடிமைத்தனக் காவல் துறைதான். ஆனால் அது மதவாத வெறி மிக்க காவல்துறை. அதனால்தான் அங்கு சிறுபான்மையினரின் கருணைமிகு அன்னை தெரசாவாம் என்றெல்லாம் இன்றுவரை நம்பப்படும் காங்கிரசு ஆட்சி இருந்தபோதும், காங்கிரசார் அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட இந்து மதவாதிகள் என்பதால் வெளியில் பாதுகாப்புப் பாசாங்கும் உ

குமாரு வா உக்காரு சாப்பிடு யசோதை அன்னை த.காந்திமதி

என் தாத்தா கடையில் நான் இருக்கும்போது கிழக்கிலிருந்து வரும் இரு சக்கர வாகனம் ஒன்றிற்காக ஏங்கி நிற்பது உண்டு. அதன் பெயர் ஃபண்டாபிளஸ். ஸ்கூட்டர் வகையைச் சேர்ந்தது. அதனை தாய் மாமா தங்கவேலு அவர்கள் ஓட்டி வர முன்னும் பின்னும் நின்றபடியும் அமர்ந்தும் வருவது காந்தி அத்தையும் அவரின் மூத்த மகன் மோகன் மற்றும் பூங்கொடி இருவரும். வாகனம் வந்தவுடன் அவர்களை இறக்கிவிட்டுப் பின்னர் என்னையோ சில சமயங்களில் அங்கிருக்கும் எங்கள் சகோதரிகளையோ ஏற்றிக் கொண்டு சிறிது தூரம் ஓட்டிச் சென்று திரும்பி வந்து கடையில் இறக்கி விடுவார் என் தாய் மாமா தங்கவேலு அவர்கள். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இப்படித்தான் அறிமுகமானவர் காந்தி அத்தை அவர்கள். அப்போது காக்கா பாளையத்தில் ஆட்டையாம்பட்டிப் பிரிவில் ஒரு கடையும் வீடும் அமைந்திருந்த இடத்தில் தங்கித் தாத்தாவிடம் கற்ற தொழில்களையே செய்து  வந்தார் எங்கள் தங்கவேல் மாமா. இளமையில் சில நாட்கள் அங்கு சென்று தங்கியிருந்த அனுபவமும் எனக்கும் என் சகோதரிகளுக்கும் உண்டு. ஒரு முறை எங்கள் தாத்தாவுடன் சண்டையிட்டுத் தன் தம்பி வசமிருந்த கடையைப் பிரித்துத் தனது பங்கெனக் கேட்டு வாங்கி இங்கேயே தங