அசசமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை கொரானா பய அச்சமென்பதில்லையே

புரட்சிக்கவி பாரதியின் எழுச்சிமிகுப் பாடலில் நான் கொரானா பய அச்சமென்பதில்லையே என்ற வரிகளைச் சேர்த்துள்ளேன்.

கொரானா உலகையே அச்சத்தின் உச்சத்தில் உறைய வைத்துள்ள ஒரு பெயர்

தினமும் தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள், தெருவில் சுற்றும் நகராட்சிக் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் நாராசமாக ஒலிக்கப்பட்டும், எழுதப்பட்டும், மக்களை உயிர் பயத்தின் உச்சத்திற்கும் வெறுப்பின் மிச்சத்துக்கும் சென்றடைய வைத்த வைக்கின்ற வைக்கப் போகின்ற ஒரு ஒற்றைச் சொல்

இந்த நாடு மதவாதத்தின் பிடியில். இந்து மதம் அழுத்தமாகக் கடவுள் உண்டென்றும் ராமர் ஒரு மகத்தான கடவுளென்றும் அறுதியிட்டுப் பறை சாற்றி கடுமையான எதிர்ப்பிற்கிடையிலும் பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது. நடந்த இடம் உத்தரப்பிரதேசம்.

அங்கிருந்த ஏவல்துறையும் தமிழகத்தைப் போலவே உச்சபட்ச அடிமைத்தனக் காவல் துறைதான். ஆனால் அது மதவாத வெறி மிக்க காவல்துறை. அதனால்தான் அங்கு சிறுபான்மையினரின் கருணைமிகு அன்னை தெரசாவாம் என்றெல்லாம் இன்றுவரை நம்பப்படும் காங்கிரசு ஆட்சி இருந்தபோதும், காங்கிரசார் அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட இந்து மதவாதிகள் என்பதால் வெளியில் பாதுகாப்புப் பாசாங்கும் உள்ளே ராம பக்தியும் கொண்டு மதவாத ஏவல்துறைக்குப் பச்சைக் கொடி காட்டச் சில நிமிடங்களில் தரை மட்டமானது பாபர் மசூதி. 

இங்குள்ள காவல்துறைக்கும் அங்குள்ள காவல்துறைக்கும் ஒரே வித்தியாசம் அங்கே ஒரு துளி இரத்தம்கூடச் சிந்தப்படவில்லை. இங்கோ வேதாந்தா நிறுவனம் அள்ளி வழங்கிய பிணக்காசைக் கண்டவுடன் தiலையைக் குறி பார்த்துச் சுட்டுத் தன் விசுவாசத்தைத் தமிழக மக்களுடன் பகிர்ந்து கொண்டது செவ்வாய்கிரகத் தமிழகக் காவல்துறை.

சரி கொரானா பிரச்சினைக்கு வருவோம். இதிலும் அதே நிலைதான். கடுமையான குளிர் காலத்தில் கொரானா அதி விரைவாகப் பரவும் என்பது அறிவியல் பேரறிஞர்களின் அதீதக் கண்டுபிடிப்பு. வட மாநிலங்கள் அதிகமானக் குளிர்ப்பிரதேசங்களைத் தன்னுள் கொண்டவை. குறிப்பாகக் கங்கையாறு பாயும் இடங்கள் உட்பட.

அங்கே கும்பமேளாக்கள், அமாவாசை என வருடத்தின் 365 நாட்களிலும் கங்கையாற்றை நாசப்படுத்தியே தீர்வதெனக் கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் இந்துமதம். கோரானா குளிர்ந்து ஓடும் கங்கை நீரில் பரவுமா பரவாதா என்பதை இந்து மத மேதாவிகளின் அறிவிற்கே விட்டுவிடலாம். ஏனென்றால் அவர்கள் தலையில் பிறந்த உயர் சாதி வகுப்பினர். நாம் முழங்காலில் பிறந்த தாழ்ந்த சாதி வகுப்பினர். 

அப்படியெல்லாம் கிடையாது நாங்கள் நல்லவர்கள் ஈரோட்டில் கூட முருகன் சிவபெருமான் இருவரின் கலர் கலரான படங்களை ஒட்டி மதமாற்றத்திற்கு ஆதரவாகத்தான் சுவரொட்டிகள் வைத்துள்ளோம் என்று சங்கிகள் சங்கு ஊதுவர். அதையும் கேட்டுத் தொலைவோம். ஏனென்றால் சகிப்பின் இமயம் தமிழனல்லவா.

கொரானா என்ற நோயை முதல் முதலாக டெல்லி இசுலாமிய மாநாட்டில்தான் இந்த நாடு கண்டுபிடித்தது. அதன் பிறகு நடந்த வரலாற்றை இங்கு எழுத இடம் போதாது. 

இந்த நாட்டுப் பிரதமர் கை தட்டச் சொன்னார். விளக்குப் பிடிக்கச் சொன்னார். தனி மனித இடைவெளி தேவை என்றார். இன்னும் என்னென்னவோ மான்கி பாத் ல (அதாங்க மனதில் குரல்) கதை கதையாகச் சொன்னார். 

ஆனால் ஒன்றை மட்டும் அவர் மறந்தே விட்டார். ஏராளமானப் பாதுகாப்புடன் கொரானா அச்சமின்றி இருப்பதால்தானோ. அது அவர் வாங்கி வந்த வரம். இங்கே தெருவே ஒதுக்கி வைத்த நிலையில் மனைவி மக்கள் கண் எதிரே கட்டிப்பிடித்து அழக்கூட வக்கற்று மரணிக்கும் சாமானியன் வாங்கி வந்தது சொர்க்கலோக வரம்.

இப்ப ஆக்சிஜன் தட்டுப்பாடாம். ஏன் ஏற்படாது. கட்டாய முகக் கவசம் என்பதால் நாள் முழுக்க ஒரு மனிதன் தன்னுடைய மூச்சையே அதாங்க வெளியே விடும் கார்பன் டை ஆக்சைடையே இழுத்து இழுத்து ஆக்சிசன் இன்றிப் போன நிலையில் கொரானா என்று மருத்துவர் சொன்னவுடன் நமக்கு மரணம் தரக்கூடிய கொடிய நோய் தாக்கி விட்டது செத்தோம்டா என்று தன் மான் கி பாத் கு இன்ஸ்ட்ர்சன் கொடுத்து விடுகிறான்.

 உடனே அவன் உடம்பு அதனைக் கிரகித்துக் கொள்கிறது. இந்த நாட்டுப் பிரதமர் மறந்து போன ராமர் கடவுள் அவர்தான் இரட்சகர் என்ற பிரக்ஞை அற்றுப் போகிறது. இராமரின் சீடன் அனுமன் குணம் அதாங்க தாவும் குணம் வந்துவிடுகிறது. மனம் நம்பிக்கையற்ற நிலையில் மரண வாசலுக்குத் தானாகவே அந்த மனிதனின் உடம்பும் வெகு வேகமாகச் சென்று விடுகிறது.

இதுதாம் உண்மை. இதுதாம் சித்தர் வாக்கு இதுதாம் பகுத்தறிவுக்கும் முட்டாள் மத அறிவுக்கும் உள்ள வித்தியாசம்.

இங்கே பிரக்ஞை வித்தியாசம் என்பவை வடமொழிச் சொற்கள் இன்ஸ்ட்ரக்சன் என்பது ஆங்கிலச் சொல். இன்னும் இந்தப் பதிவில் ஏராளம் கலந்துள்ள வட மொழிச் சொற்களைத் தமிழன் தமிழ்தான் என்று நம்பிக் கொண்டிருப்பதுகூட மதவாதம் தந்த மகத்தான அறிவுதாம்.

இது சற்று நீண்ட பதிவுதாம் எனினும் இதைப் படிப்பவர்கள் புரிந்து கொண்டவர்கள் கட்டாயம் இதை உலகலாவிய அளவில் பகிர்ந்தே தீர வேண்டும். இது கொரானா என்ற நோயைப் பரப்பிய அயோக்கியர்களை விட அதனை ஊதி ஊதி டைட்டானிக் கப்பலாக்கி மனித இனத்தை மரணக் கடலில் மூழ்கடித்த மேற்கண்ட ஊடகங்கள் செய்த தவறைச் சுட்டிக் காட்டி அச்சத்தில் தவிக்கும் மனித குலத்திற்குச் செய்யும் மகத்தான உதவி 

க்கிழுத்தச் ம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்கள் மொழி பெயர்த்து அதனை எளிமையான தமிழில் வடித்துக் கொடுத்த சத்தியமூர்த்தி அவர்கள் எளிமைப்படுத்தி வழங்கிய மேல் நாட்டு அறிஞர் ஜேம்ஸ் ஆலன் அவர்களின் எண்ணங்கள் பற்றிய புத்தகத்தைக் கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் மனம் குழப்பமற்ற நிலையில் படித்துக் குழப்பமுற்றும், மனம் தெளிந்த நிலையில்கூடப் படித்துக் குழப்பமுற்றும் 

இப்பொழுது மிகத் தெளிவான நிலையில் ஆழ்மன உணர்வு என்னுள் உள்ள இறை சக்தி மற்றும் இநதப் பிரபஞ்ச வெளியில் பிறந்த தந்தை பெரியார் உள்ளிட்ட ஏராளமானப் பகுத்தறிவுத் சித்தர்களின் தலைவன் முருகன் தந்த உத்வேகத்தால் 

ஆணித்தரமாக அவனது கருவியாக இதோ 5 மாதங்களாக தினமும் 3 மணி நேரம் மட்டுமே உறங்குவதற்கு நேரம் கிடைத்து மீதமுள்ள நேரமெல்லாம் மதவாதம், ஊழல்வாதம் இரண்டுக்கும் எதிராக முகநூலில் பதிவிட்டு வந்து இது எம் தமிழன்னை தந்த அறிவுடன் கடைசியாக ஊதும் சங்கு படித்துவிட்டுப் பகிர்ந்து உலகெங்கும் வாழும் மக்கள் அச்சமின்றித் தெளிந்தால் நாளைய விடியலாவது நம்பிக்கை சார்ந்த விடியலாக உலக மக்களுக்கு விடியட்டும்.

இந்தக் கருத்தைப் பிடிக்காதவர்கள் சங்கர மடம் ஜக்கி விக்கி நித்தி இன்னும் ஏராள பிற மதங்களும் சார்ந்த அறிவுத் தெளிவு மிக்க பெரியோர்களின் காலைக் கழுவிக் குடியுங்கள். உங்கள் வியாதிகள் எல்லாம் பறந்தோடும். குறிப்பாக கொரோனா நோயை அவர்கள் நரகலோகத்திற்கு அனுப்பி வைப்பது சர்வ நிச்சயம். ஆனால் அதற்கு முன் ஒன்றை மட்டும் நீங்கள் உடனடியாகச் செய்து தீர வேண்டும் உயிர் வேண்டுமென்றால். 

வேறொன்றுமில்லை உங்கள் உடம்பைத் தவிர போட்டுள்ள உடைகள் முதற்கொண்டு அனைத்தையும் அனைத்தையும் வீடு வாசல் சொத்து சுகம் நகை நட்டு அனைத்தையும் அவர்களுக்குப் பட்டா போட்டுக் கொடுத்து விடுங்கள் 

அட கொரானாக் கிரகணம் போயே போச்சு

பரவாயில்ல இப்ப நாங்க ஆடையின்றி நின்றாலும் தமிழர்கள். உலகிற்கே ஆடை கொடுத்தவர்கள். நாங்க வியாழன் கிரகத்திற்குப் பறந்து சென்றாவது தறி இயந்திரம் வடிவமைப்போம். ஆடை அணிந்து கொள்வோம்.

இங்க நிர்வாணச் சாமியார்கள் ஆட்டம் போடட்டும். அறிவு புகட்டட்டும்.

மனித மனம் உடம்பு எண்ணங்கள் ஒன்றொன்றும் வேறு வேறு அல்ல

மனம் என்ன சொல்கிறதோ அதையே உடல் கேட்கும். 

காலை எழுகிறோம். நேற்றைய கடுமையான வேலை அசதி. ஆனால் நாம் இன்று நமக்குக் காய்ச்சல் வரும் போல உள்ளதே என மனதிற்குள் சொல்கிறோம். 

உடனே உடல் அதனை ஏற்கிறது. உடலில் ஏற்கனவே உள்ள கிருமிகளுக்கு எதிராகச் சற்று உடல் வெப்பத்தைக் கொண்டுள்ள நிலையில் நம்முடைய மனம் சொன்னதை ஏற்று மேலும் உடல் வெப்பத்தைக் கூடுதலாக்குகிறது, உடல் மேலும் வெப்பமடைய நம் மனம் நமக்குக் காய்ச்சல்தான் என உறுதி செய்கிறது. இன்று வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவிடுவோம் என மனம் மீண்டும் கட்டளை இடுகிறது. உடல் அதனை ஏற்று நம் உடல் வெப்பத்தை அதே நிலையிலேயே பராமரிக்கத் துவங்குகிறது.

 நம் மனம் மீண்டும் மருத்துவரிடம் செல்ல வேண்டுமோ என்று அடுத்த எண்ணத்தை வெளிப்படுத்த உடலும் அதற்கேற்ப இயங்குகிறது. ஊசியோ மாத்திரையோ போட்டால்தான் உடல் சரியாகும் என மனம் சொல்ல உடலும் ஊசிக்கும் மாத்திரைக்கும் காத்திருக்கும்.

சிலர் தங்களின் உடலை நோஞ்சானாக வைத்திருப்பர். இவர்களின் உடம்பு மேற்கண்ட மான் கி பாத் காரணமாக அடுத்தவர் துணையுடனே மருத்துவமனை செல்ல வேண்டும்.

சிலர் தங்களின் உடலைத் திடகாத்திரமாக வைத்திருப்பர். அவர்கள் உடனே மிதிவண்டி உந்து வண்டி மகிழுந்து நம் அரசியல்வாதிகளைப் போல வசதியிருந்தால் எலிகாப்டரில்கூடப் பறந்து சென்று மருத்துவமனை அடைந்து அவரவர் வசதிக்கேற்ப வைத்யம் மருத்துவம் டிரீட்மெண்ட் என ஏதேனும் எடுத்துக் கொள்வர்.

அறிவு உள்ளவரையே உடலில் உயிர் தங்கும் மகாகவி இரவீந்திர நாத் தாகூர்

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு பகுத்தறிவு வேங்கை தந்தை பெரியார். 

அய்யா மதவாதியே இவர் நாயக்கர் அல்ல தெலுங்கர் அல்ல நீங்கள்தான் சாதி வகுத்தீர்கள் அதில் அகப்பட்டுக் கொண்டு அவர் தவிக்கிறார். அவர் தன் சாதிக்காக எழுதவில்லை பேசவில்லை தன் தள்ளாத வயது வரை இந்தத் தமிழ்நாட்டைச் சுற்றவில்லை. அவர் காசு சேர்த்தார் அது பகுத்தறிவு இயக்கத்திற்காக அதை அனுபவிப்பவர்கள் பகுத்தறிவு புகட்டுகிறார்களா என்பதை அவர் அறியார்

மனமே மருந்து

மனமே சித்தம்

மனம் என்ன சொல்கிறதோ உடல் அதனைக் கேட்கும்

மனம் சாவைத் தேடச் சென்னால் உடல் சாவைத் தேடும்

மனம் வாழ்வைத் தேடு என்றால் உடல் உழைக்கத் தயாராகும்

அடுத்தவன் வியர்வையைச் சுவைப்பவன் பகுத்தறிவுவாதியோ மதவாதியோ என்னைப் பொருத்தவரை 

அவன்தான் பெரியார் மொழியில்

அயோக்கியன்

காட்டுமிராண்டி

முட்டாள்

நான் முட்டாள் அல்ல மனிதன்

கடைசியாக 

கண்ட இடத்தில் எச்சில் துப்புங்கள் இது எச்சில் தேசம்

கண்ட இடத்தில் குப்பை கொட்டுங்கள் இது சனநாயக நாடு

கண்ட இடத்தில் புகை பிடியுங்கள் புகை உயிருக்கு நண்பன்

கண்ட இடத்தில் குடித்துவிட்டு ஆடையின்றிப் படுங்கள் இது குடி மக்களின் தேசம்

சாக்கடையில் குப்பைகளைக் கொட்டுங்கள் இது கொசு வளர்ப்பு நாடு

கங்கை காவிரி போன்ற ஆறுகளை மணல் அள்ளி நாசப்படுத்துங்கள் கண்ட இடங்களில் மலம் கழியுங்கள் என்ன வேண்டுமானாலும் உங்கள் விருப்பப்படிச் செய்யுங்கள்

ஏனென்றால் இது சொதந்திர நாடு

வந்ததே ஆத்திரம்

வந்ததே ஆத்திரம்

வந்ததே ஆத்திரம்

ஜெய்  அனுமான் 

நானும் வானரம்தாம் ஒரு காலத்தில் 

பழக்க தோசம் 

இலங்கைக்குத் தாவி விட்டேன்

புத்தம் தமிழன் இரத்தம் கச்சாமி

ஆமென்

இந்தப் பதிவினை நிறைவு செய்யும் போது புதுவைப் பொதிகைத் தொலைக்காட்சியில் மருத்துவர் ராமசாமி (அட இவரும் ஸ்ரீராமனோ) அவர்கள் தெளிவான தமிழில் சற்று ஆங்கிலம் கலந்தும் மத்திய அரசின் தொலைக் காட்சி என்பதாலோ என்னவோ சித்த மருத்துவம் சித்த மருந்துகள் என்பதைத் தவிர்த்துவிட்டு ஆயுர்வேதம் எனத் தன் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தியவாரே மனம் தாம் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதையும்

மனதில் எவ்வித அச்சமும் கொள்ளாமல் அழைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் செய்து கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் அளவிற்கு அதிகமானால் அமிர்தமும் விசம் போன்ற அறிவுரைகளோடு 

விக்ஸ்  தடவாதீங்க சிரப்பு குடிக்காதீங்க வாட்ஸ்அப் தகவலைக் கேட்டு கண்ட மூலிகைகளைத் தின்னாதீங்க மெடிக்கல்ஸ் ஸ்டோர் இன்ஸ்டண்ட் டாக்டர்களிடம் தலைவலி இடுப்புவலி முழங்கால் வழி காய்ச்சல் தும்மல் இருமல் என்று மேதாவியாகச் சொல்லி அவர்கள் உங்கள் உடல்நிலையை 

ஞான திருஸ்டியில் அறிந்து கொடுக்கும் பத்து மாத்திரைகளை அப்படியே முழுங்கித் தொலையாதீர்கள் 

மருத்துவர் பத்து வருடங்களுக்கு முன்பு உங்கள் உடல் நிலைக்கு ஏற்பக் கொடுத்த மருந்துகளை இப்பயும் போட்டுத் தொலையாதீர்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லி

 திரிகடுகம் ஏல அரிசி மஞ்சள் வெந்நீர் பொதினா கருவேப்பிலை போன்ற சித்த மருத்துவம் சார்ந்த பொருட்களையே  சொல்லி

தொலைக்காட்சி பாக்காதீங்க எனக் குட்டி

அலோபதி மருத்துவம் கவச உடை அணிந்து ஏராளமான கணினி இயந்திரங்களைக் காட்டிப் பரிசோதிப்பதைக் கண்டவுடன் பயந்து மரணத்தைத் தழுவிய எங்கள் தாய் மாமாவின் துணைவியார் காந்தி அத்தை போல இன்னுயிர் நீக்காதீர்கள் எனத் திட்டாமல் அறிவுறுத்தியது 

இந்தப் பதிவினை முழுவதுமாகப் படிக்கும் ஒருவருக்காவது சென்றடைந்து பயனளிக்கட்டும். 


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!