கங்க்ராஜ்லேசன் காக்காப் பாள்யம் போலீஸ் ஸ்டேசன் VS கமலா அக்கா

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அறிமுகமானவர் கமலா அக்கா. எனது இரண்டு சகோதரிகள் மற்றும் தம்பி உட்பட நானும் அவர்களை அக்கா என்றே அழைப்பதுண்டு. எனது தாய்வழித் தாத்தா அமரர் கந்தசாமி அவர்களின் கடை அருகில் உள்ள கட்டிடத்தில் வாடகைக்குத் தனது தொழிலைச் செய்து வந்தவர் கமலா அக்காவின் கணவர். அவரது பெயரும் கந்தசாமிதாம்.

எப்பொழுது பார்க்க நேர்ந்தாலும் பளிச்சென்று சிரித்து புன்னகை பூக்கும் முகத்துக்குச் சொந்தக்காரர் கமலா அக்கா. எனது மூத்த சகோதரியின் வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்குக் குடியிருந்ததால் எங்கள் குடும்பம் அங்கு செல்லும்போதெல்லாம் எனது பெற்றோரை வாங்க சம்பந்தி என அன்போடு அழைத்துச் சாப்பிட்டுப் போக வேண்டும் என வற்புறுத்துவர் கணவன் மனைவி இருவரும். ஒரு சில நாட்களில் அவர்கள் தேநீர் அருந்தும் வேளையில் அவர்கள் வீட்டைக் கடக்க முற்பட்டால் தேநீர் அருந்த அழைத்துத் தட்டாமல் சில நாட்கள் நாங்கள் தேநீர் அருந்தியதும் உண்டு. அவர்களின் மூத்த பெண் வயதுக்கு வந்தபோது அவர்கள் வீட்டில் விருந்து சாப்பிட்டதுகூட இன்றும் என் நினைவில் ஆடும் நிகழ்வுகளில் ஒன்று.

அவர்களின் மூத்த மகன் குமாருக்கு என்னை விட ஒரு வயதே அதிகம். அவனைத் தொடர்ந்து விஜயா, கோமதி, மற்றும் திலகா என முத்தான மூன்று பெண் குழந்தைகள், விஜயா என்னை விட 5 வயது இளைய பெண். மற்ற இருவரும் முறையே இரண்டு வருடங்கள் தள்ளிப் பிறந்தவர்கள்.

ஆரம்ப நாட்களில் தங்கள் தாய் தந்தையர் எங்கள் பெற்றோரை வாங்க சம்பந்தி என அழைப்பதும் என்னை மருமகனே என அழைப்பதுவும் கண்டு இந்தப் பெண்கள் மூவருமே மிரண்டு போய் எங்கே இவனைத் தங்களில் எவருக்கேனும் கட்டி வைத்து விடுவார்களோ என்ற அச்சத்துடனும் சற்று  நாணத்துடனும் நெளிவதை அடிக்கடி நான் கண்டதுண்டு. பின்னர் இது வழக்கமாக அவர்கள் அழைப்பதுதானே என இயல்பாகி என்னிடமும் நட்பாகப் பழகுவர், 

அக்கா மகள்கள் என்றால் திருமணம் செய்து கொள்ளும் உறவு. அதே சமயம் கமலா அக்கா என அவரையும் அவரது கணவரை மெக்கானிக் அண்ணே எனவே அழைத்து வந்ததால்தானோ என்னவோ எங்களுக்குள் காதல் கத்தரிக்காய் என எதுவும் விளைந்ததில்லை. 

குமார் என்னை பள்ளியில் வைக்கப்பட்ட பட்டப் பெயரில்தான் அழைப்பது வழக்கம். மேலும் என்னைக் காணும்போதெல்லாம் வாடா லெப்டு என அழைத்து எனது இடது கைப் பழக்கத்தைக் கிண்டலடிப்பதும் வழக்கம். இதையும் இந்தக் குடும்பத்தினர் கேட்டு இரசிப்பது வழக்கம். கமலா அக்காவும் அவரின் நான்கு பிள்ளைகளும் பள்ளி நேரம் தவிர அண்ணனின் கடையில்தாம் அவருக்கு உதவியாக இருப்பார்கள்.

அண்ணனின் தொழில் வீட்டிற்கு மின் உபகரணங்கள் அமைப்பது, மின்சார மோட்டார்கள் பழுதடைந்தால் சரி செய்து காயில் கட்டுவது போன்றவை. நான் பள்ளி விட்டு வீடு திரும்பியதும் பறந்து வந்து எனது தாத்தா கடையில்தான் வந்தடைவேன். அடுத்து அண்ணனின் கடை விசிட். இது எனது அன்றாட நிகழ்வு. 

மிகச் சிறு வயதில் அவரும் கமலா அக்காவோ அல்லது அவர்கள் பிள்ளைகளோ மோட்டாருக்குக் காயில் கட்டிக் கொண்டிருக்கும்போது நான் அநாவசியமாகக் குறுக்கிட்டால் வேலை செய்யும் போது குறுக்கே வராதே என எச்சரிப்பர். அதற்குக் காரணம் செம்புக் கம்பியைச் சுற்றும்போது எண்ணிக்கொண்டே சுற்றுவர். எனது இடையூறால் எண்ணிக்கை மாறி விடக்கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வுதான். 

இதை நான் சற்று விபரம் அறிந்தபோதுதான் புரிந்து கொண்டேன். அதன் பின்னர் கமலா அக்கா வீட்டு வேலைகள் செய்வதற்காக நகரும்போது நான் அங்கிருந்தால் வாடா மருமகனே நீயும் சுற்று என அண்ணன் என்னை அழைப்பார் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் நான் காயில் சுற்றும் கைப்பிடியைப் பற்றிக் கொண்டு சுற்றத் துவங்குவேன்.

அவரிடம் வரும் பல்வேறு மின்சார சாதனங்களைப் பழுது பார்ப்பதை நான் இவ்வாறு அவரது கடைக்குச் செல்லும்போதெல்லாம் அடிக்கடிக் கவனித்து வந்ததால் அவை பசு மரத்து ஆணி போன்று இளம் வயதிலேயே என் மனதில் பதிந்ததெனலாம், 

பம்பரம் விடுதல்,தாத்தா கடையில் உடைந்து கிடைக்கும் சோடா பாட்டிலின் கோலிக் குண்டுகளைச் சேகரித்து விளையாடுதல், இன்றைய கிரிக்கெட்டின் தாயான கிட்டிப் புள் விளையாடுதல், நெடுஞ்சாலையில் ஓடும் வாகங்களின் நெம்பர் பிளேட்டுகளில் உள்ள எண்களை குறிப்பிட்ட நேரம் ஆளுக்கு ஒரு எண் எனப் பிரித்துக் கொண்டு எவரது எண் உள்ள வாகனங்கள் சாலையில் அதிகமாக வந்ததோ அவரே வென்றவர் என ஆரவார உற்சாகம் செய்தல் 

இதில் சில சமயங்களில் எனது தாய் மாமா அமரர் தங்கவேலு அவர்களும் மெக்கானிக் அண்ணன் அவர்களும்கூடச் சிறுவர்களாக மாறி எங்களுடன் கலந்து கொள்வது போன்றவை குமாருடன் சிறுவர்களான எங்களின் தினசரி விளையாட்டுக்களில் சிலவாகும். கமலா அக்காவுடன் தாயம் விளையாட்டும் அவர் வீட்டு வேலைக்கென நகர்ந்தால் குமாருடனோ அல்லது இந்த பெண்களுடன்கூட நான் விளையாடியது உண்டு. 

இது தவிர எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழா முனியப்பன் கோயில் எருதாட்டத் திருவிழா, தவிர அவாளின் கட்டுக் கதையை நம்பி வருடா வருடம் ஆடி ஒன்றாம் தேதியன்று தேங்காய் சுட்டு முடித்தவுடன் முள்வேலிகளில் புகுந்து பச்சோந்திகளைக் கொன்று குவிக்க முற்பட்டது போன்றவை எங்களின் வீர விளையாட்டுகளின் ஓர் அங்கம்

எனது அன்றைய அஇஅதிமுகவின் கல்விக் கொள்கை எனது தலையெழுத்தையே மாற்றிய பிளஸ்1 வந்து எனது வாழ்வை நாடோடியாக்கிய எஸ்எஸ்எல்சி என அழைக்கப்பட்ட 11 ஆம் வகுப்பு உயர்நிலைப் பள்ளிப் படிப்புஎ முடிக்கும் வரை இந்தக் குடும்பத்துடனான உறவு இப்படித்தான் நீண்டு களித்திருந்தது.

ஒட்டு மொத்தக் குடும்பமும் பாடு பட்டும் அவர்களின் குடும்பம் அவ்வளவாகச் சம்பாதித்திருக்கவும் இல்லை மெயின் ரோட்டில் ஒரு வசதியான மச்சு வீட்டை மொத்தக் குடும்பமும் பார்த்துப் பார்த்து கல் மண் சுமந்து பாடுபட்டுக் கட்டியதுதாம் அந்தக் குடும்பம் நிகழ்த்திய மகத்தான சாதனை என நான் கருதுகிறேன். இத்தனைக்கும் எங்கள் ஊர் மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களுக்கு அவர் ஒருவர்தான் அந்தக்காலத்தில் மின் சாதன மெக்கானிக். 

எங்கள் தந்தை ஊரிலேயே மிகப் பெரியதாகக் கட்டிய அரிசி அரவை ஆலைக்கு மின் இணைப்புக் கொடுத்து மோட்டார் அமைத்ததும் அவரும் குமாரும்தான். ஒரு முறை கடுமையாக வீசிய சூறைக்காற்றினால் புதிதாகக் கட்டிய எங்கள் ஆலையின் ஓடுகள் பறந்தன. ஆபத்தான உயரத்தில் என்னையும் ஏற வைத்து அவற்றைக் கட்டுக் கம்பிகள் கொண்டு கட்டிப் பாதுகாப்பு செய்ததும் அவர்கள்தான்

புகுமுக வகுப்பு படிப்பதற்காக நான் நாமக்கல் அறிஞர் அண்ணா ஆண்கள் கலைக் கல்லூரிக்குச் சென்றதற்கு முன்பு வரை எங்கள் குடும்பம் பெரிதாகக் கட்டியும் நடத்த இயலாத அரிசி அரவை ஆலையில்தான் வசித்து வந்தோம். எனவே கமலா அக்கா குடும்பத்தை அடிக்கடிச் சந்திப்பது குறைந்தது என்றாலும் மாறாத அதே நட்பு மற்றும் புன்னகை சார்ந்த முகங்களைத்தாம் அந்தக் குடும்பத்திடம் நாங்கள் கண்டிருக்கிறோம். 

விதி வகுத்த பாதையில் எங்கள் குடும்பம் நாடோடியாகி நாங்கள் நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூரில் குடியேறப் புறப்பட்டபோது கலங்கி நின்றதோடு அவ்வப்போது நான் மட்டும் அடிக்கடி மகுடம் சாவடி வரும்போதெல்லாம் கமலா அக்காவும் அவரது கணவரும் எங்களைப் பிரிந்த வருத்தங்களோடு என்னிடம் எங்கள் குடும்ப நிiலையைப் பற்றி அக்கறையுடன் விசாரிக்கத் தவறியதே இல்லை.

குமார் அவர்களின் ஒரே மகன் என்பதால் அதிகப்படியான செல்லம் கொடுத்து வளர்த்து விட்டனர். எனவே அவனுக்குப் படிப்பு ஏறவில்லை என்றாலும் பள்ளி நேரம் தவிரப் பெரும்பாலும் தந்தைக்கு உதவியாக அண்ணனில் கடையில் அவரது வேலைகள் அனைத்தும் அத்துப்படியாகிக் கற்றுத் தேர்ந்ததால் அண்ணன் குமாரை மேற்கொண்டு படிக்க அனுப்பாமல் தனக்கு உதவியாக வைத்துக் கொண்டார். 

20 ஆம் நூற்றாண்டில் கருணாநிதி திமுக கொண்டு வந்து நாட்டை இன்றுவரை நாசப்படுத்தி இரண்டு தiலைமுறைத் தமிழர்களை மட்டுமன்றி இதோ 21 ஆம் நூற்றாண்டிலும் நிதிக் குடும்பம் ஆட்சி பீடமேறப் பிரியாணி மதுப்புட்டிகள் காசு மணி துட்டு எனத் தனக்கு ஓட்டுப்போட்ட கழகப் பெண்கள் உட்டபடத் தமிழகத்திலுள்ள அனைத்துக் குடும்பங்களின் அவல வாழ்க்கையை இதே நிலையில் தொடரச் செய்து 

மூன்றாவது தலைமுறையையும் குடிக்கு அடிமையாக்குவோம் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு தமிழக மக்களில் மூன்றில் ஓது பங்கென குடி கெட்ட கோடிக்கணக்கான குடும்பங்களில் கமலா அக்கா குடும்பமும் குமார்  குடிப்பழக்கத்திறகு அடிமையானதைத் தொடர்ந்து படு குழிக்குள் தள்ளப்பட்டது, 

எனது தந்தைக்கு முந்தைய தலைமுறை கூடத் தந்தையரிடம் உள்ள தீய பழக்க வழக்கங்களையே பிள்ளைகளும் கற்று நாசமானது போல எனக்குத் தெரிநது மெக்கானிக் அண்ணனிடம் எந்தவித தீய பழக்க வழக்கங்களும் இருந்தது இல்லை. தான் உண்டு தன் வேலை உண்டு. உறவினர்கள், வாடிக்கையாளர்கள்,  நண்பர்கள் மற்றும் என் போன்ற சிறுவர்களிடமும் அரசியல் பேசுவது கேலி கிண்டல் செய்து சிரித்து மகிழ்தல் போன்றவைதாம் அவரது பழக்க வழக்கங்கள் எனலாம். 

நாமக்கல் படிக்கச் சென்ற போது மற்றும் பரமத்தி வேலூர் குடியேறிய பின் ஊர் திரும்பும்போதெல்லாம் என்னை மகிழ்ச்சி பொங்க வரவேற்கும் விளையாட்டும் வேடிக்கையுமாக வாழ்ந்த என் பள்ளி மற்றும் குடும்ப நட்புத் தோழன் குமார் குடிக்கு அடிமையாகத் துவங்கி தம் தந்தையும் தங்கள் குடும்பமும் பாடுபட்டுச் சேர்த்து வைத்த சொத்துக்களோடு தங்கள் குடும்பத்திற்கிருந்த நற்பெயரையும் கெடுக்கத் துவங்கியதும் இதற்கும் பின்னர்தாம்.

இந்த நிலையில் கமலா அக்காவின் இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடிக்கப்பட்டது. குமார் திருந்தவில்லை. சரி திருமணம் செய்து வைத்தால் திருந்தக்கூடும் என என்னிடம் கூட ஊர் வரும்போது தெரிவிக்கும் அண்ணன் அவர்கள் தன் மகனுக்குப் பெண் தேடத் துவங்கி நாமகிரிப்பேட்டையில் தங்கள் குடும்பத்தை மீறிய வசதி மிக்க இடத்தில் பெண் எடுத்து சீரும் சிறப்புமாக ஏராளமாக பணக்காரர்களின் கார் அணிவரிசை தன் மகனின் திருமணத்தின்போது இருந்ததாகப் பெருமையும் பட்டுக்கொண்டார்.

கமலா அக்காவைப் பொருத்தவரை செல்வாக்கான வாழ்க்கை வேண்டுமென்று ஆசைப்பட்டவரல்ல. மூன்று பெண் குழந்தைகள் தனக்கு இருந்ததால்தானோ என்னவோ அவரை ஆடம்பரமாக நகையோ உடையோ உடுத்தி நாங்கள் கண்டதில்லை. தனது மகன் திருமணத்தின்போது வேண்டுமாயின் அவர் சற்று விலை உயர்ந்த ஆடைகளை அணிந்திருக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

திருமணமாகியும் குமாருக்குப் பொறுப்பு வரவில்லை. வீட்டோடு மாப்பிள்ளையாகக்கூட நாமகிரிப் பேட்டையில் வாழ்ந்ததாகக் தகவல். ஆயினும் குமாரின் குடிப்பழக்கம் எல்லை மீறிப் போனதும் ஒல்லியான குமாருக்கு பருத்த உடலுடைய பொருத்தமற்றுத் தேர்ந்தெடுத்து பெண்ணுக்கு இவனுடன் வாழப் பிடிக்காத வேறு ஏதோ காரணத்திற்காகத் தன் கணவனை விட்டுப் பிரிய விவகாரம் வரதட்சணைக் கொடுமை என்ற தவறான கோணத்தில் பணம் படைத்த பெண் வீட்டாரின் அணுகுமுறையால் திசைமாறிக் கமலா அக்கா குடும்பத்தைச் சின்னா பின்னமாக்கியது.

காசுக்கு விலைபோன மகளிர் காவல் நிலையம் நான்கு சுவற்றுக்குள் நடநதேறி பணபலச் செல்வாக்குக்கு விலைபோன சாட்சியங்களை வைத்து வாய்தா வாய்தா எனப் பல ஆண்டுகள் நீட்டித்துத் தீர்ப்பளித்த வழக்குமன்ற விசாரணை சற்று நேரம் ஒதுக்கி ஊருக்குள் வந்து விசாரித்திருந்தால் ஒரு வேளை ஊரே திரண்டு வந்து கமலாக அக்கா குடும்பத்திற்கு ஆதரவாகச் சாட்சியமளித்து வழக்கின் போக்குத் திசைமாறி உடனடியாக முடிவிற்கு வந்திருக்கக்கூடும். விதி யாரை விட்டது 

வழக்கு மன்ற விசாரணைகளால் உருக்குலைந்து போன குடும்பம் ஒரு வழியாக விவாகரத்து பெற்று மீண்டும் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து மறுமணம் செய்து வைக்க அப்பவும் குடிக்கு அடிமையாகிப்போன குமாரின் குணம் மாறவே இல்லை.மொத்தக் குடும்பமும் நிலை குலைந்து போன நிலையில் மெயின் ரோடில் முன்புறம் கடைகளுக்கெனக் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்த வீட்டின் ஒரு பகுதி நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் இடிக்கப்பட வாடகை வருமானமின்றி  நிலைமை மேலும் மோசமானது. 

நான் ஊருக்கு ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை என வரும்போது வீட்டின் பின் பகுதி வாசல் அருகே களையிழந்து சோகமாகக் காட்சி அளிக்கும் நிலையில்  கமலா அக்காவைக் காண நேர்ந்தாலும் தன்னை வீட்டினுள்ளே ஒடுக்கிக் கொள்வார். நானும் அவர் நிலை பற்றி அவ்வப்போது கேட்டறிந்ததால் வீட்டினுள் சென்று விசாரிக்க விரும்பவில்லை. மெக்கானிக் அண்ணன்தாம் எப்போதாவது என்னைக் காணும்போது தங்கள் குடும்ப நிலை பற்றி வருத்தப்டுவார்.

ஒரு நாள் ஊருக்கு வந்த போது கமலா அக்கா இறந்துபோனதாக எனது மூத்த சகோதரி சொல்லக் கேட்டு நான் அதிர்ந்தே போனேன். தாய்மை உணர்வை என்னுள் ஊட்டியவர்களில் அவரும் ஒருவரல்லவா. அவரின் இறப்பையும் வழக்கம்போல இதற்கென நான் அலைய வேண்டி வருமே என என் தமக்கையர் எனக்குத் தெரிவிக்காதது ஒரு காரணமென்றாலும்

அப்படியே தெரிவித்திருந்து அக்காவின் இறுதி யாத்திரை நிகழ்வில் நான் கலந்து கொண்டு இருந்திருந்தால் அந்தப் பெண் குழந்தைகள் தன் தாயாரின் இழப்பைத் தாங்காது விழுந்து புரண்டு அழுவதைக் கண்டு நானும் கதறி அழுதிருக்கக்கூடும். இதோ இந்தப் பதிவின் போதுகூட என் கண்களின் ஓரம் ஈரம் கசிகிறதே. இவன் எதற்கடா இப்படிக் கதறி அழுகிறான் என ஊர் என்னைக் கேலி செய்தும் சிரித்திருக்கக்கூடும். அதற்குக் காரணம் கமலா அக்கா எனது உடல் சார்ந்த இரத்த பந்த உறவுள்ள சாதியைச் சேராதவர்கள் என்பதனால்.

இன்றைய மாறிப் போன என் இரத்த பந்த உறவுகளுக்கும் இதோ இன்றுவரை சாதி பிரித்து தமிழகத்தைச் சீரழித்து வரும் மதவாதத்திற்கும் கமலா அக்காவுக்கும் எங்களுக்கும் நிலவிய உறவு எத்தகையது என்பது புரிந்திருக்க வாய்ப்பில்லைதானே.

அது சரி எதற்கு இப்போது இந்தக் கதை என்று இதைப் படிக்கும் எவருமே கேட்கக்கூடும். 

இன்ஸ்டாகிராமில் 15 வயதுச் சிறுமியும் சிறுவனும் மருமகனே மருமகளே என உறவு முறை வைத்து நட்பு பாராட்டிய தத்தம் பெற்றோரின் ஆதரவுடனே ஒரு திரைப்படப் பாடலுக்கு நாகரீகமான உடையணிந்து ஆடிய செயலைப் பதிவிடப்போக இது குழந்தைகளின் உணர்வைச் சீரழிக்கும் எனத் தம் முதுகில் ஏராளமான அழுக்கு மூட்டைகளைச் சுமக்கும் மதவாதமும் சீர்திருத்தவாதிகள் என்ற போர்வையில் உலாவரும் அசிங்கங்களும் கொடுத்த நெருக்குதல்களுக்காகப் 

பத்து அரசு அதிகாரிகள் ஒரே சமயத்தில் அந்தச் சிறுமியின் வீட்டுக்குச் சென்று எச்சரித்துத் தொலைய ஊர் வம்பிற்கெனவே ஏதோ தங்கள் குடும்பம்தாம் உத்தமமான குடும்பம் என அலையும் அக்கம்பக்கத்தினரின் ஏசல்களுக்கும் பயந்து போன அந்தச் சிறுமி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து வெளியிட்ட வீடியோவை பற்றிய தகவலை முக நூல் பக்கத்தில் காண நேர்ந்ததுதாம். 

அதில் முத்து என்பவர் முளைத்து மூன்று இலைகூட விடவில்லை உங்களுக்கு லவ்வு ஒரு கேடா எனக் குங்குமம் இட்ட பெட்டைத்தன முகத்தோடு விமரிசித்ததை சிவந்த உடல் பெண்களை அரைகுறை ஆடையோடு தங்கிலீஸ் பேச வைத்து ஆண்களையும் சிறுவர்களையும் உரசி உரசி கெக்கே பிக்கேவெனப் பல் இழித்து இதைக் காணும் சிறுவர் சிறுமியரைத் தினவு தீர்த்து நல்வழிப்படுத்தும்  ஊடகங்கள் மற்றும் சினிமா நடிகைகளைக் களமிறக்கி ஓட்டுப் பொறுக்கிய மதவாத அமைப்புகளும் திட்டித் தீர்த்த காட்சிகளை வெளியிட்டு இரண்டு குடும்பங்களை நாடு சிரிக்க வைத்தார்களே அதற்குப் பதிலடி கொடுப்பதற்கே இந்தப் பதிவு.

சினிமா தோன்றிய நாட்களில் இருந்த நாகரீகமும் பண்பாடும் இன்றைய திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு ஆனந்தவிகடன் குமுதம் உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் சினிமா சம்பந்தப்பட்ட படங்கள் மற்றும் விமரிசனங்கள் அதே பழைய தரத்துடன் இருந்து தொலைந்திருந்தால் இதோ இவர்கள் கூவுவதில் ஒரு நேர்மை சமுதாயம் சார்ந்த அக்கரை போன்ற எளவுகள் இருந்திருந்தால் இவர்களின் வக்காலத்தில் தவறேதுமில்லை எனலாம். தம் முதுகில் வண்டி வண்டியாக அழுக்கைச் சுமப்பவன் அடுத்தவன் முதுகைச் சொரிந்து விட வருவதுதானே இன்றைய மதவாத ஊழல்வாத அடிமைத் தமிழகத்தின் அவல நிலை.

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்

உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்

தறிகெட்டுப் போகும் தமிழர் வாழ்வை நெறிப்படுத்த தமிழன்னை வழங்கிய நடிகர் திலகத்தின் இந்தப் பாடல் ஒன்றே இதோ இந்தக் கூமுட்டைகளுக்குப் போதுமானதுதாம் இந்தப் பதிவும் இதில் கமலா அக்கா குடும்பத்தைப் பற்றி நான் எழுதிய மேற்கண்ட உண்மை நிகழ்வுகளும் அது பற்றிய எனது கருத்துக்களும் தேவையில்லைதான்.

மெக்கானிக் அண்ணன் எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது இரண்டு தேர்களுக்கும்; தனது பங்காளிகளான சின்னத்தம்பி பெரியதம்;பி மற்றும் தனது சொந்தத் தம்பிகளுடன் இணைந்து முட்டுக் கட்டை போடுவது வருடா வருடம் தவறாது நிகழும் நிகழ்வு.

மாரியம்மனின் முதல் தேர் புறப்படும் முன்பு அதன் தேர்ச் சக்கரத்தில் ஆடு ஒன்றினைப் பலி கொடுத்து அதன் உடலை எடுத்துக்கொள்வது இன்றுவரை தொடரும் வழக்கம். அந்தப் பலியாட்டைத் தேர்ச்சக்கரத்தின் அடியில் கிடத்தி அதைப் பலியிடுவதை சிறுவனாக இருந்த காலத்தில் நான் அச்சம் கொண்டு பார்ப்பதுண்டு. அன்று மிக உயரமாகக் காட்சியளித்த எங்கள் மாரியம்மன் தேர் இன்று எனக்குச் சிரியதாகத் தோன்றுகிறது.

ஒரே மகன் என்றாலும் அண்ணன் தன் மகனின் வாழ்க்கைத் தேர் ஓட அவ்வப்போது முட்டுக் கட்டை போடத் தவறிவிட்டாரோ என்றுதாம் எண்ணத் தோன்றுகிறது. 

தேரும் வாழ்க்கையும் ஒன்றுதாம். மகிழ்ச்சி பொங்க நூறு பேர் ஆரவாரத்துடன் இழுக்கும் தேருக்கு முட்டுக் கட்டை போடாவிட்டால் அது தாறுமாறாக ஓடிக் கவிழ்ந்து இறப்புகளைச் சந்திக்க நேரிடும்.

தமிழன் வாழ்வில் தேரும் ஒரு செய்தியைத்தான் சொல்வதற்காக வடிவமைக்கப்பட்டது. (இதைப் பற்றி நான் ஒரு தனிப் பதிவினை எனது வலை தளத்தில் பதிவிட்டுள்ளேன்)

 மேலே என்ன வித்தியாசமான தலைப்பு என்கிறீர்களா

வேடிக்கையும் விளையாட்டுமாக இளமையில் வாழ்ந்த என் தோழன் குமார் தன் கடையருகே சுற்றிச் சுற்றி வரும் ஒரு மன நோயாளி ஆண் நபரிடம் வேடிக்கையாக இந்த வாசகத்தைப் பேச வைத்து அடிக்கடி கேட்டு இரசித்த வரிகளே

பின்னாளில் தங்கள் குடும்பம் காவல் நிலையம் வழக்கு மன்றம் எனச் சீரழிவதற்குக் காரணமாக அமையும் எனத் தெரிந்திருந்தால் ஒரு வேளை குமார் இந்த வாசகத்தை உச்சரித்திருக்கவே இல்லாமல் போயிருக்கக்கூடும்.

நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூரிலிருந்து நான் மகுடம் சாவடி மண்ணில் காலடி எடுத்து வைக்கும்போதெல்லாம் எவ்விதத் தீய பழக்க வழக்கங்களும் அற்ற எனது பள்ளித் தோழன் 

வாடா லெப்டு மண்டை ஓடு என என் பட்டப் பெயர் சொல்லி அழைப்பதும், நான் விடைபெறும் போது கங்க்ராஜ்லேசன் காக்காப் பாள்யம் போலீஸ் ஸ்டேசன் என என் கைகளைப் பற்றிக் குலுக்கி விடை தருவதை ஒட்டு மொத்த கமலா அக்கா குடும்பமும் இரசித்து மகிழ்ந்த காட்சி இன்னும் எனது நெஞ்சம் நெகில வைக்கும் பசுமையான நினைவுகள்தாம்.

பின் குறிப்பு

தமிழ்ச்சமூகம் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கி;றது. நீ எழுதியதும் பேசியதும் தவறு. ஆட்சியாளர்கள் அறம் சார்ந்து ஆ;ட்சி நடத்துகின்றனர். மதவாதிகள் அறம் சார்ந்து மக்களை நெறிப்படுத்துகிறார்கள். உன்னுடைய பதிவு சமுதாயத்தைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது என்றுகூட என் மீது வழக்குத் தொடுக்க முகாந்திரம் உண்டு.

இறுதியாக 

தயவு செய்து நீங்கள் அக்கம் பக்கம் எவருடனும் பழகாதீர்கள். குறிப்பாகக் குழந்தைகளை மருமகனே மருமகளே என முறை வைத்துத் தப்பித் தவறியும் அழைத்துவிடாதீர்கள். 

இப்படி அழைப்பது தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் தமிழ்ப்பண்பாட்டிற்கும் எதிரான செயல். 

உங்கள் குடும்பம் உங்கள் உறவு உங்கள் சாதி உங்கள் மதம் என பால் மண்டலவெளியளவு உயர்ந்த வட்டத்திலேயே வாழுங்கள் 

குறிப்பாக இசுலாமியக் குடும்பங்களுடன் சொந்தம் பாராட்டி விடாதீர்கள். மதவாதத் தேவர்கள் உங்களை அசுரர்களாகப் பாவித்துத் துவம்சம் செய்வார்கள்.

வேற்று சாதியினரிடம் உறவு முறை சொல்லிப் பழகாதீர்கள். மதத் தலைவர்கள் உங்களைச் சாதியை விட்டு விலக்கி முக்தி அடைவார்கள்.

யாதும் ஊரல்ல

யாவரும் கேளிரல்ல

வாழ்க ஊழல்வாதம்

வாழ்க மதவாதம்

வாழ்க சாதியவாதம்

வாழ்க இந்துஸ்தான்

வெல்லட்டும் இந்தி மொழி

வாழ்க எல்லோரும் இந்நாட்டு அடிமைகள்

வாழ்க சொதந்திரம்

ஒழிக சொதந்திரத்திற்காகப் பாடுபட்ட அன்னதானச் சிறைப் பிரியர்கள்.

ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

போதுமா மதவாதிகளே

ஊழல்வாதிகளே

தீர்ந்ததா உங்கள் ஆத்திரம்

அப்படியும் என் மீதும் என் எழுத்தின் மீதும் உங்களின் ஆத்திரம் தீரவில்லை என்றால்

உங்களில் எவர் உத்தமரோ 

அவரே முதலில் என் மீது கல்லெடுத்து அடித்துக் கொல்லட்டும்.

எத்தனை பிறவிகள் எடுத்தாலும் என் பிறப்பும் இறப்பும் இந்தத் தமிழ் மண்ணில்தாம் நிகழ வேண்டும்.

இதுவே எனது தீராத தாகம்

தமிழனென்று சொல்லுவேன்

தலை நிமிர்ந்து செல்லுவேன்

என்னைத் தன் இல்லம் வரவழைத்து நாடோடியாக்கி அழகு பார்த்த 

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களுக்கும்

எனது முப்பாட்டனார் இராமசாமி அவர்களுக்கும்

ஈரோட்டு மண்ணுக்கு வரவழைத்து என்னிடம் விதைத்த பகுத்தறிவை ஆலமரமாக்கிய இராமசாமிப் பெரியார் அவர்களுக்கும்

எனது பள்ளித் தமிழ் ஆசான் பகுத்தறிவுச் சிங்கம்

ஆ. பெரியசாமி அவர்களுக்கும் இந்தப் பதிவு

காணிக்கை அல்ல சமர்ப்பணமும் அல்;ல 

நன்றிக் கடன்

அன்புக் கடன்

அன்புக்கு நான் அடிமை

தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை

ஆ.தெ.குமார ராஜா

ஐந்தாம் தமிழ்ச்சங்கம்

உலகம்.

கொசுறுப் பின் குறிப்பு

அதென்ன எல்லாம் இராமசாமி இராமலிங்கம் பெரியசாமி என இந்த மூன்று பகுத்தறிவாளர்கள் பெயர் மாற்றமின்றியே உள்ளதே என்கிறீர்களா 

பாபர் மசூதி இடித்த அயோத்;தி இராமன் வேற

தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் ராமசாமி ராமலிங்கம் என அழைக்கும் ராமன் வேறங்கோ

அவன் தமிழகத்தைச் சீரழித்த இராமன்

இவன் தமிழகத்தை வாழ வைத்த ராமன்

ஆதாரம் இப்பொழுதும் கொடுக்க மனமின்றிப் படிக்க நேரமின்றி என்னிடம் உள்ள கருங்கல்பாளைய நூலகத்தில் எடுப்பாரின்றிக் கிடந்து முதலாவதாக எடுத்து மீண்டும் நீட்டிக்கப்பட்டு என் வசம் உள்ள இரண்டு தமிழின இருண்ட கால வரலாற்றைத் தோண்டியெடுத்துத் தமிழர்கள் படிப்பார்கள் படித்து வெளிச்சம் பெறுவார்கள் என எழுதப்பட்ட இரண்டு புத்தகங்கள் நூல்கள் பொஸ்தகம் எதுவோ

சோழர் வரலாறு 

பாடுபட்டுத் திரட்டியவர் முனைவர் நா.ராசமாணிக்கனார்

தமிழ் வளம்

பாடுபட்டுத் திரட்டியவர் முனைவர் இளங்குமரனார் 

இவர்களைத் தமிழ்நாடு போற்றவே போற்றாது

ஏனென்றால் 

அறம் செய விரும்பு என எடுத்தவுடன் தன் ஆத்திச் சூடியை எழுதிய அவ்வையார் 

மன்னர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்ட பெண் சிங்கக் கவி

இப்ப நாட்ல அற்புதமாக எழுதும் பேசும் ஏராளமான கவிஞர்கள் இருக்காங்க

இவிங்க அப்பப்ப எந்தக் கட்சி ஆட்சிக்கு வருதோ அந்தக் கட்சியின் சர்வாதிகார ராசாதி ராசா  ராஜ கம்பீர ராஜா என மேடைக்கு மேடை அவ்வையாரைத் தூற்றியும்

மொதல்வரைப் போற்றியும் துதி பாடும் ஜால்ரா மன்றச் ஜால்ராக் கவிங்கோ 

அப்றம் எச்சக்கலை என்றழைக்கப்படும் ராஜா

அலைக்கற்றை ஊழல் திகார்ச் சிறை ராசா

இந்த ரெண்டுபேரும் நான் இல்லைங்க. அவிங்க மாதிரி நான் அரசியல்வியாதி குடும்ப வாரிசாகவா பொறந்திருக்கேன் இது போன்ற நோபல் அவார்டு வாங்க

நமக்கு மண்டைஓடு இந்த லோக்கல் அவார்டு ஒன்றே போதுங்கோ.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!