இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கல்விமுறையில் மாற்றங்கள் பாகம் 5

இனி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் கல்வி மட்டுமே கட்டாயமாக்கப்படும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் தனித்திறன் கண்டறியும் பயிற்சிகளுடன் ஆங்கிலமும் விருப்பப்படும் மாணவர்களுக்கு அவரவர் தாய் மொழிகளில்  கற்பதற்கு தேவையான ஆசிரியர்களுடன் கூடிய கல்விமுறை உருவாக்கப்படும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்களின் தனித்த அவர்களுக்கு விருப்பமான பாடப் பிரிவுகள் மட்டுமே கற்றுத்தரப்படும் சித்த மருத்துவம் மட்டுமே பிரதானமான மருத்துவக்கல்வி ஆகவும் அத்துடன் அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ள மருத்துவ கருவிகளை கையாண்டு சித்த மருந்துகள் மட்டுமே மக்களுக்கு போதிக்கக்கூடிய கல்விமுறையை ஏற்படுத்தப்படும் இவ்வாறு பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக திகழ அடிப்படை அடிக்கட்டுமானம் ஆக மட்டுமே இனி தமிழக கல்வி முறையை மாற்றி அமைப்போம் அதோடு மட்டுமன்றி இன்றைய தமிழ் சமுதாயம் தங்களின் உழைப்பின் பெரும்பகுதியை தங்கள் பிள்ளைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்படுவதால் இனி அரசாங்கமே குழந்தைகளை படித்து பகுத்தறிவுடன் வாழக்கூடிய வழிமுறைகளையும் ஏற்பட

கல்வி முறையில் மாற்றங்கள் பாகம்-4 உலகத்தர கல்வி

மாணவர்கள் இனி ஐந்து வயதில் மட்டுமே கல்வி கற்க பள்ளியில் அனுமதிக்கப்படுவர் கல்விக்கூடங்களில் தற்போது உள்ள சோதனைக் கூடங்கள் அகற்றப்படும் உலகத்தரத்தில் விளையாட்டு மைதானம் உலகத்தரத்தில் கல்விக் கூடங்கள் நல்ல காற்றோட்ட வசதி மேம்படுத்தப்பட்ட கட்டிடங்கள் இங்கு இனி தமிழர்தம் கலை சிற்பம் ஓவியம் சிலம்பம் பரதம் என பல தரப்பட்ட கலைகள் கற்கும் இடங்களாக மாற்றம் செய்யப்படும் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் இந்த பேருந்தில் மாணவச் செல்வங்கள் பாதுகாப்புடன் பயணித்து காவல்நிலையம் வங்கிகள் ரயில் பேருந்து விமான நிலையங்கள் அறமன்றங்கள்  தொழிற்சாலைகள்  போன்ற இடங்களுக்குச் சென்று அங்கு உள்ள நடைமுறைகள் கண்டு பயிலவும் அறிவு பெறவும் தேவையான வழிமுறைகள் ஏற்படுத்தப்படும் அதே போல பெரிய நிறுவனப் பேருந்துகள் மாணவர்களைப் பள்ளிக்கு வந்து அழைத்துச் சென்று அங்கு அவர்கள் நிறுவனச் செயல்பாடுகளை கற்றுத் தரும் வழிமுறைகள் கட்டமைக்கப்படும்

கல்வி முறையில் மாற்றங்கள் பாகம் 3 தனித் திறன் வளர்த்தல்

கல்விக்கூடங்களில் இனி பழைய மனப்பாட பாட முறைகள் முற்றிலும் தடை செய்யப்படும் மாணவர்களின் தனித் திறமைகள் வெளிப்படும் வண்ணம் பாடத் திட்டங்கள் அமைக்கப்படும்  எப்படி என்றால் ஒரு மாணவனுக்கு அறிவியல்தான் பிடிக்கிறது என்றால் அவன் அதற்கான படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் வண்ணம் அவனது கல்வி முறை அவனுக்கு அமைத்து தரப்படும் ஒரு மாணவனுக்கு விளையாட்டு தான் பிடிக்கும் என்றால் அவனுக்கு கல்வி இரண்டாம் விருப்பமாகவும் விளையாட்டு முதல் விருப்பமாகவும் மட்டுமே இனி திகழும் இதற்கு ஏற்ப மாணவன் கல்விக்கூடத்தில் அடியெடுத்து வைத்த நாளில் துவங்கி அவனுடைய எதிர்கால வாழ்க்கை விருப்பம் லட்சியம் தனித்திறமை என்னவென்று அடையாளம் காணப்பட்டு அதன் அடிப்படையில் மட்டுமே அவனது கல்விமுறை இனி அவன் விருப்பத்திற்கு ஏற்ப அமையுமாறு வழிவகைகள் ஏற்படுத்தப்படும் இதனால் ஏற்படும் நன்மைகள் என்னவென்றால் பெற்றோரின் விருப்பம் பிள்ளைகள் மேல் திணிக்கப்படுதல்  மாணவர்களின் மன உளைச்சல்கள் தற்கொலை எண்ணங்கள் வீணான சிந்தனைகள் போன்ற அனைத்தும் மறையும் வண்ணம் அவனது வாழ்க்கை முறை இனி அமையும்

கல்வி முறையில் மாற்றங்கள் பாகம் 2 நாகரீகப் பரிவர்த்தனை

தமிழக கல்வி கூடங்களில் வெளிமாநில வெளிநாட்டு மாணவச் செல்வங்கள் வரவழைக்கப்பட்டு நம் பள்ளி மாணவர்களுடன் சில வாரங்கள் செலவிட்டு நம் கல்வி முறையை கண்டு பயன் பெற வழிமுறை ஏற்படுத்தப்படும் அதே போன்று நல்ல தகுதியும் திறமையும் உள்ள தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்கள் வெளிநாடுகள் சென்று அங்கு அவர்கள் சில வாரங்கள் தங்கி அங்குள்ள நடைமுறைகளைப் பயின்று வர அனுமதிக்கப் படுவார்கள்  குறிப்பாக பாகிஸ்தான் சீனா போன்ற பகை நாடுகள் ஆக கருதப்படும் நாடுகளின் மாணவச் செல்வங்கள்  இங்கு வந்து சில வாரங்கள் தங்கி இருந்து நம் கல்விமுறையின் நடைமுறைகளை பெற்று பயனடையும் வண்ணம் வழிவகைகள் செய்யப்படுவதால் அண்டை நாடுகளுடன் நிலவும் பகை உணர்வுகள் குறைந்து அமைதியும் அன்பும் சமாதானமும் நல்லிணக்கமும் உருவாகும் வழிமுறைகள் மேம்படுத்தப்படும் இதற்கேற்ப புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உலக நாடுகள் அனைத்துடனும் உடனடியாக செய்து கொள்ளப்படும்

கல்வி முறையில் மாற்றங்கள் பாகம் 1 குருகுலக் கல்வி முறை

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் கல்விக்கூடங்களும் அரசுடமை ஆக்கப்படும்   கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட கல்விக்கூடங்கள் உடன் இணைந்து அவர்களின் தங்குமிடங்கள் கட்டப்படும் அனைத்து வசதிகளுடன் கட்டப்படும் இந்த தங்கும் இடங்களில் மட்டுமே இனி பணிபுரியும் ஆசிரிய பெருமக்கள் தங்கி பணியாற்ற வேண்டும் என்று கட்டாய விதி உருவாக்கப்படும்  மேலும் ஆண்டுக்கு ஒருமுறை இவர்கள் வேறு வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவர் அதற்கு தகுந்தார்போல் தங்களுடைய வாழ்க்கை முறையை இவர்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும்  அதேபோன்று அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவ செல்வங்களுக்கும் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டு பள்ளியில் சேரும் ஒவ்வொரு மாணவரும் அங்கேயே தங்கி படித்து முன்னேறும் வழிமுறைகள் உருவாக்கப்படும் இந்த மாணவர்களும் ஆண்டிற்கு ஒரு முறை வேறு வேறு பள்ளிகளில் படிக்கும் வண்ணம் இடமாற்றம் செய்யப்படுவர் உதாரணத்திற்கு ஒரு மாணவன் சொந்த ஊர் நாமக்கல் என்றால் ஒரு ஆண்டு அங்கு அடுத்த ஆண்டு கொடைக்கானல் அடுத்த ஆண்டு தருமபுரி என மாறி மாறி பல்வேறு நில அமைப்பு பல்வேறு இன மொழி சார்ந்த மாணவச் செல்வங்கள் உடன் கலந