கல்விமுறையில் மாற்றங்கள் பாகம் 5

இனி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் கல்வி மட்டுமே கட்டாயமாக்கப்படும்

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் தனித்திறன் கண்டறியும் பயிற்சிகளுடன் ஆங்கிலமும் விருப்பப்படும் மாணவர்களுக்கு அவரவர் தாய் மொழிகளில்  கற்பதற்கு தேவையான ஆசிரியர்களுடன் கூடிய கல்விமுறை உருவாக்கப்படும்
ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்களின் தனித்த அவர்களுக்கு விருப்பமான பாடப் பிரிவுகள் மட்டுமே கற்றுத்தரப்படும்
சித்த மருத்துவம் மட்டுமே பிரதானமான மருத்துவக்கல்வி ஆகவும் அத்துடன் அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ள மருத்துவ கருவிகளை கையாண்டு சித்த மருந்துகள் மட்டுமே மக்களுக்கு போதிக்கக்கூடிய கல்விமுறையை ஏற்படுத்தப்படும்
இவ்வாறு பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக திகழ அடிப்படை அடிக்கட்டுமானம் ஆக மட்டுமே இனி தமிழக கல்வி முறையை மாற்றி அமைப்போம்
அதோடு மட்டுமன்றி இன்றைய தமிழ் சமுதாயம் தங்களின் உழைப்பின் பெரும்பகுதியை தங்கள் பிள்ளைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்படுவதால் இனி அரசாங்கமே குழந்தைகளை படித்து பகுத்தறிவுடன் வாழக்கூடிய வழிமுறைகளையும் ஏற்படுத்தித்தர போவதால் மக்கள் அவரவர் வசதிக்கேற்ற தொகையை கல்வி கட்டணமாக செலுத்த வைத்து கல்விமுறையில் ஒரு அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்து உலகையே தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கவண்டும் என்பதே படிக்காத மேதை கல்வி வள்ளல் கர்மவீரர் காமராஜர் அவர்களின் இந்த இனிய பிறந்தநாளில் ஐந்தாம் தமிழ்ச் சங்கம் அவரது கனவுகளோடு சேர்ந்து தமிழ் தாயின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கும் நாளைய எதிர்கால தமிழகத்தின் தேவைக்கான அதிரடி மாற்றங்கள்
இதில் உள்ள நிறைகுறைகளை தமிழக மக்கள் மேம்படுத்தி தமிழகத்தை ஒற்றுமையுடனும் வலிமையுடனும் சாதி மத இன மொழி மாநிலம் நாடு என்ற எல்லைகள் கடந்து உலகெங்கும் பரவி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய தத்துவத்துடன் உலகமக்கள் மக்களுடன் இணைந்து வாழும் வழிமுறைகள் காண்போம் என்று பெருந்தலைவரின் இந்த இனிய பிறந்தநாளில் சபதம் ஏற்போம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!