கல்வி முறையில் மாற்றங்கள் பாகம் 3 தனித் திறன் வளர்த்தல்

கல்விக்கூடங்களில் இனி பழைய மனப்பாட பாட முறைகள் முற்றிலும் தடை செய்யப்படும் மாணவர்களின் தனித் திறமைகள் வெளிப்படும் வண்ணம் பாடத் திட்டங்கள் அமைக்கப்படும் 
எப்படி என்றால் ஒரு மாணவனுக்கு அறிவியல்தான் பிடிக்கிறது என்றால் அவன் அதற்கான படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் வண்ணம் அவனது கல்வி முறை அவனுக்கு அமைத்து தரப்படும் ஒரு மாணவனுக்கு விளையாட்டு தான் பிடிக்கும் என்றால் அவனுக்கு கல்வி இரண்டாம் விருப்பமாகவும் விளையாட்டு முதல் விருப்பமாகவும் மட்டுமே இனி திகழும்
இதற்கு ஏற்ப மாணவன் கல்விக்கூடத்தில் அடியெடுத்து வைத்த நாளில் துவங்கி அவனுடைய எதிர்கால வாழ்க்கை விருப்பம் லட்சியம் தனித்திறமை என்னவென்று அடையாளம் காணப்பட்டு அதன் அடிப்படையில் மட்டுமே அவனது கல்விமுறை இனி அவன் விருப்பத்திற்கு ஏற்ப அமையுமாறு வழிவகைகள் ஏற்படுத்தப்படும்

இதனால் ஏற்படும் நன்மைகள் என்னவென்றால் பெற்றோரின் விருப்பம் பிள்ளைகள் மேல் திணிக்கப்படுதல் 
மாணவர்களின் மன உளைச்சல்கள் தற்கொலை எண்ணங்கள் வீணான சிந்தனைகள் போன்ற அனைத்தும் மறையும் வண்ணம் அவனது வாழ்க்கை முறை இனி அமையும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!