கல்வி முறையில் மாற்றங்கள் பாகம் 2 நாகரீகப் பரிவர்த்தனை

தமிழக கல்வி கூடங்களில் வெளிமாநில வெளிநாட்டு மாணவச் செல்வங்கள் வரவழைக்கப்பட்டு நம் பள்ளி மாணவர்களுடன் சில வாரங்கள் செலவிட்டு நம் கல்வி முறையை கண்டு பயன் பெற வழிமுறை ஏற்படுத்தப்படும்
அதே போன்று நல்ல தகுதியும் திறமையும் உள்ள தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்கள் வெளிநாடுகள் சென்று அங்கு அவர்கள் சில வாரங்கள் தங்கி அங்குள்ள நடைமுறைகளைப் பயின்று வர அனுமதிக்கப் படுவார்கள்
 குறிப்பாக பாகிஸ்தான் சீனா போன்ற பகை நாடுகள் ஆக கருதப்படும் நாடுகளின் மாணவச் செல்வங்கள்  இங்கு வந்து சில வாரங்கள் தங்கி இருந்து நம் கல்விமுறையின் நடைமுறைகளை பெற்று பயனடையும் வண்ணம் வழிவகைகள் செய்யப்படுவதால் அண்டை நாடுகளுடன் நிலவும் பகை உணர்வுகள் குறைந்து அமைதியும் அன்பும் சமாதானமும் நல்லிணக்கமும் உருவாகும் வழிமுறைகள் மேம்படுத்தப்படும் இதற்கேற்ப புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உலக நாடுகள் அனைத்துடனும் உடனடியாக செய்து கொள்ளப்படும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!