கல்வி முறையில் மாற்றங்கள் பாகம் 1 குருகுலக் கல்வி முறை

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் கல்விக்கூடங்களும் அரசுடமை ஆக்கப்படும்  
கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட கல்விக்கூடங்கள் உடன் இணைந்து அவர்களின் தங்குமிடங்கள் கட்டப்படும்

அனைத்து வசதிகளுடன் கட்டப்படும் இந்த தங்கும் இடங்களில் மட்டுமே இனி பணிபுரியும் ஆசிரிய பெருமக்கள் தங்கி பணியாற்ற வேண்டும் என்று கட்டாய விதி உருவாக்கப்படும் 

மேலும் ஆண்டுக்கு ஒருமுறை இவர்கள் வேறு வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவர் அதற்கு தகுந்தார்போல் தங்களுடைய வாழ்க்கை முறையை இவர்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும் 

அதேபோன்று அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவ செல்வங்களுக்கும் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டு பள்ளியில் சேரும் ஒவ்வொரு மாணவரும் அங்கேயே தங்கி படித்து முன்னேறும் வழிமுறைகள் உருவாக்கப்படும்

இந்த மாணவர்களும் ஆண்டிற்கு ஒரு முறை வேறு வேறு பள்ளிகளில் படிக்கும் வண்ணம் இடமாற்றம் செய்யப்படுவர்

உதாரணத்திற்கு ஒரு மாணவன் சொந்த ஊர் நாமக்கல் என்றால் ஒரு ஆண்டு அங்கு அடுத்த ஆண்டு கொடைக்கானல் அடுத்த ஆண்டு தருமபுரி என மாறி மாறி பல்வேறு நில அமைப்பு பல்வேறு இன மொழி சார்ந்த மாணவச் செல்வங்கள் உடன் கலந்து பழகி விளையாடி 
 தங்களுடைய வாழ்க்கை முறையை செம்மைப் படுத்திக் கொள்ள முடியும்  

இத்தகைய கல்வி முறையில் உருவாகும் நன்மை என்னவென்றால் மாணவச் செல்வங்கள் தங்களுக்குள் சாதி மத இன மொழி வேறுபாடுகள் எதுவுமின்றி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழர்தம் சங்ககால வாழ்க்கை முறை நடைமுறைக்கு மீண்டுவரும் குருகுல வாசம் ஆக இந்த கல்விக்கூடங்கள் திகழும் 

ஒவ்வொரு பள்ளியும்  அதிக அளவிலான மாணவர்கள் குறைந்த ஆசிரியர்கள் என்ற நிலை மாறி
குறைந்த அளவிலான மாணவர்கள் அதற்கேற்ற ஆசிரிய பெருமக்கள் என்ற நிலை உருவாக்கப்படும்

இவ்வாறு அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆசிரியப் பெருமக்கள் தங்களது கற்பிக்கும் திறனை முழுமையாக வெளிப்படுத்தி பணி நிறைவு செய்யும் பது அவர்கள் தாங்கள் விரும்பும் இடத்தில் நிரந்தரமாக தங்கி தங்களுடைய ஓய்வு கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இல்லங்கள் கட்டித் தரப்படும்

ஆண் ஆசிரியர் அவரது துணைவியார் வேறு பணி அல்லது பெண் ஆசிரியை அவரது கணவர் ஒரு வணிகம் சார்ந்த அல்லது வேறு வேலை பார்ப்பவர் என இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் களையப்பட்டு தக்க வழிமுறைகள் ஏற்படுத்தப்படும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!