இனி ஒரு விதி செய்வோம்_வாக்குரிமை

தமிழ் நாடு வந்தாரை வாழவைக்கும் மண். இந்த மண்ணை ஆள இந்த மண் சார்ந்த மக்களுக்கே உரிமை உண்டு.

இங்கு வந்து வாழும் பிற மாநில மொழி சார்ந்த மக்கள் இரண்டு வகையினர்.

ஒன்று காலம் காலமாக இருந்து வருபவர்கள். 

இரண்டாவது தங்கள் மாநிலத்தில் வாழ வழியின்றி தமிழகம் நோக்கிப் பஞ்சம் பிழைக்க வருபவர்கள்.

இவர்களுக்கு மத்திய மதவாத அரசின் ஒரே நாடு ஒரே ரேசன் என்ற கோட்பாடுக்கு மட்டுமே உரிமை தரலாம்.

வாக்களிக்கும் உரிமை இங்குள்ள ஆட்சி அதிகாரத்துக்கு போட்டியிடும் உரிமையை இனி அவர்கள் அனைவரும் கோர முடியாது என்று சட்டம் செய்வோம்.

அவர்கள் தாங்கள் பிறப்பெடுத்த மாநிலத்தில் அமைந்துள்ள சொந்த தொகுதியில் மட்டுமே இனி வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயச் சட்டம் கொண்டு வருவோம்.

இதற்காக இவர்கள் எல்லாம் சொந்த ஊருக்கு தேர்தல் காலத்தில் பயணிக்க வேண்டிய அவசியம் இன்றி அஞ்சல் வாக்காக தனக்கு விருப்பப்படும் வேட்பாளருக்கு

அதாவது அவர்கள் மாநிலத்தில் உள்ள வேட்பாளருக்கு மட்டுமே இனி வாக்களிக்க முடியும்.

அதே போல அவர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பினால் தங்கள் மாநிலத்தில் உள்ள சொந்த தொகுதியில் அல்லது அங்குள்ள தனக்கு செல்வாக்கு மிக்க வேறு ஒரு இடத்தில் போட்டியிட்டு அங்கு சென்று மக்கள் சேவை ஆற்றலாம்.

இந்த விதி தமிழராக பிறப்பெடுத்து பிற மாநிலங்களுக்கு சென்று வாழ்கின்ற நம்மவர்களுக்கும் கட்டாயம் ஏற்படுத்தப் பட வேண்டும்.

தமிழகத்தை ஆளத் துடிக்கும் ஆதிக்க சக்திகளுக்கு ஆப்பு வைக்க இந்தச் சட்டம் உடனடித் தேவை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!