பசுமை நிறைந்த நினைவுகளே ராம் கமால்

என்னை விட ஒரு வயது குறைவு

நான் 11th SSLC

ராம் கமால் 10th SSLC

இருவரும் உறவும் நட்பும்

  என் இளைய தமக்கை பிரேமா அக்கா கணவர் சம்பத் மாமாவின் தாய் மாமா அவர்களின் மகனாக அறிமுகம் ஆகாதவர் கமால்.

என் வகுப்புத் தோழனும் என் தாய் மாமாவின் மைத்துனரும் ஆன தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநர் ஆகப் பணி புரிந்த நண்பர் பாஸ்கரின் வீட்டுக்கு விளையாடச் செல்லும்போது எதிர் வீட்டில் கமால் குடும்பம் வசித்தது. 

பள்ளியில் நான் என் நண்பர்கள் ரவீந்திரன் அண்ணாமலை அன்பழகன் நால்வர் அணி. 

ரவீந்திரன் வீட்டுக்கும் பாஸ்கரின் வீட்டுக்கும் விளையாடச் செல்லும்போது அறிமுகம் ஆனவர் கமால். 
விளையாட்டுத் தோழன் இல்லை என்றாலும் பள்ளி இறுதி வகுப்புவரை எங்களுடன் படித்தவர் என்பதாலேயே எங்கள் நட்பு வளர்ந்தது.
17 வயதில் பிரிந்து என் 42 வயதில் இணைந்தது எம் நட்பு

பிரிந்த நட்பு மீண்டும் இணைந்த போது 

அவரின் தந்தை எங்களிடம் இல்லை.

என்னுள் பகுத்தறிவுச் சுடர் பிரகாசிக்கத் தூண்டுதலாக இருந்தவர் கமாலின் தந்தையார் பெருமதிப்பிற்குரிய கிள்ளி வளவன் அவர்கள்

மகுடம் சாவடி ஒன்றியப் பெருந்தலைவர் பதவியை அலங்கரித்து அரசியல் ஆதாயம் தேடாதவர்

அஇஅதிமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளராகப் பிரகாசித்தவரது மறைவின் போது நான் மரியாதை செய்யும் வாய்ப்பைத் தவற விட்டு வருந்திய நாட்கள் பல. 

கண்ணியம் மிக்க தலை சிறந்த பேச்சாளர்

தந்தை பெரியார் அவர்களின் போர்ப் படைத் தளபதி

நான் அப்போது கர்ம வீரரின் தீவிர ஆதரவு நிலை. 

எனக்கு அதிமுகவைப் பிடிக்காது.

ஆனால் கமாலின் தந்தையை மிகவும் பிடிக்கும்

தன் பெயரையும் தன் மனைவி பெயரையும் இணைத்துத் தங்கள் செல்வங்களுக்குப் பள்ளியில் சேர்த்த புரட்சியாளர்

இசுலாம் மார்க்கம் தமிழரின் சங்க கால நட்பெனும் நோக்கில் தன் மகனுக்கு 

ராம் கமால்

என்று பெயரிட்டு அழைத்த சாதி மத எதிர்ப்புப் போராளி 

என்னைப் பார்க்கும் போதெல்லாம் வயதில் அவரின் மகனுக்கு ஒப்பவன் என்று கருதாமல் வாங்க தம்பி நல்லா இருக்கீங்களா என்று புன்னகை முகத்துடன் நலம் விசாரிக்கத் தவராதவர்

கமாலின் அன்னையின் அன்பு ததும்பும் முகம் இன்றும் என் நினைவில் ஆடும்.  என்னை உபசரித்த யசோதை அன்னையரில் அவரும் ஒருவர்.

கமாலின் தங்கை P.K. பொன்மணி எனக்கும் தங்கையே. பழகுவதற்கு மிக இனிமையான தங்கை அவர்.

கமாலின் இல்லத்தில் நண்பர்களுடன் படிக்கவும் விளையாடவும் சென்று அவர்களின் அன்பைப் பெற்றது என் பசுமை நிறைந்த நினைவுகளே

பள்ளியில் கமால் முதலாமிடம் 10th இல்

நான் மூன்றாமிடம் 11th இல்

கமாலின்  நட்பு மீண்டும் புதுப்பிக்கப் பட்டது என் தாய்மாமா நடேசன் திலகவதி அத்தை  அவர்கள் மகன் பவானியில் பிரபல கண் மற்றும் பல் மருத்துவ நிபுணர்கள் Dr. கோபி சங்கர் தம்பதியின் திருமண நிகழ்வில் 

அன்று புதுப்பிக்கப்பட்ட நட்பு அவ்வப்போது அலைபேசியில் தொடருகிறது.

அப்துல் கலாம் அய்யாவின் வாழ்க்கை வரலாற்றைக் கவிதை வடிவில் வடித்து கலாம் அய்யாவின் அணிந்துரையை நேரில் சந்தித்துப் பெற்று அற்புத நூலாக வெளியிட்டவர்.

சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவப் பேராசிரியர்.

அலைபேசியில் அழைத்து கமாலின் மகள் திருமண அழைப்பு கிடைத்தும்  ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணமாகக் கலந்து கொள்ள இயலாவிட்டாலும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்களை what's app வாயிலாக வெளிப்படுத்தினேன். 

அன்று மீண்டும் அவர்களின் அன்பினைப் பெறும் வாய்ப்பைத் தவற விட்டாலும்

அன்றும் இன்றும் என்றும் தொடரும்

எங்கள் 

பாடித் திரிந்த பறவைகள்

கால நட்பு

என்றும்

காலத்தால் அழியாத செல்வம்

நட்பு நட்பு நட்பு நட்பு நட்பு மட்டுமே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!