பூங்காற்று திரும்புமா?

முதல் மரியாதை

இந்தப் படம் நேற்று ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது நடிகர் திலகம் என்ற பூவிலிருந்து உதிர்ந்து

என்றோ புத்தகத்தில் வைத்த தாழம்பூ மாடலாக இன்றும் நறுமணம் வீசிக் கொண்டிருக்கும் 

ஒட்டுமொத்தக்  கலைஞர்களுக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துதல்களைச் சமர்ப்பிக்கிறேன். 

இந்தத் தமிழின வரலாற்றுப் பெட்டக ஓவியத்தை முழுமையாகப் பார்க்க வேண்டும் என்ற என் ஆவல்

வணிகம் செய்தும் வேலை செய்தும் பிழைக்க வேண்டிய நிலை இனி எனக்குத் தேவையில்லை என்று 

உறுதியான நம்பிக்கை கொண்டு துவக்கிய கலைப்பொருள் தயாரிப்புக்கூடம் பொது முடக்கத்தால் முடங்கிப் போன நிலையை 

முடக்கிவிடாமல் வீட்டில் இருந்து தொடருவதால் இயலாமல் போனது.

இந்தப் படத்தில் வரும்  பூங்காற்று திரும்புமா பாடலில் ஒரு வார்த்தைத் தொடர் வரும்

எங்க சாமிக்கு மகுடம் ஏரணும்

மதவாத
ஊழல்வாதப் போலிச் சாமிகளின் மகுடங்கள் சாவடிக்கப்பட்டு 

தமிழன்னையின் அழகு முகத்தில் வெற்றி மகுடம் சூட்டும் நாள் வெகு விரைவில்.

 இளைய சமுதாயத்திற்கு என் கருத்துகள் ஏன்  ஏற்புடையதாக இல்லை என்று ஆய்வு செய்தேன்.

அப்பொழுதுதான் எனக்குப் புலனானது இவை அனைத்தும்  இன்றைய முன்னணிக் கதாநாயகர்கள் ஆட்சியைப் பிடித்து அரியணை ஏறுவதற்கு பேசுகின்ற ஏமாற்று வசனங்களை அப்படியே காப்பி அடித்து எழுதப்பட்டவை எழுதப்படுவது போன்று இருப்பதால்தான் என் கருத்துக்கள் இளைய சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் நிலை உருவானதென்று அறிவு தெளிவானது.

என் நினைவு தெரிந்த நாள் முதல் குடும்ப நிலை சரியில்லாததால் நான் திரைப்படம் பார்ப்பது அரிதானது.

எங்கள் தாய்வழித் தாத்தா, பின்னர் தாய் மாமாக்கள் நடத்திய ஒலி பெருக்கி நிலையத்தில் என் 17 வயது வரை அந்தக் காலக்கட்டத் திரைப்படங்கள் முழு வசனங்கள் கேட்டு வளர்ந்தவன் நான். சிவாஜியை நேசித்து மக்கள் திலகத்தின் செல்வாக்கை புறக்கணித்தவன். அதே சமயம் எங்கள் தாய்மாமாக்கள் மக்கள் திலக ஆதரவு என்பதால் அதிகமாக அவரது தத்துவப் பாடல்களையும் எனக்குப் பிடித்த நடிகர் திலகம் பாடல் இசைத்தட்டுகளை நானாகத் தேர்வு செய்து கேட்பது என் தினசரி நிகழ்வு.

குறைந்த எண்ணிக்கையிலான  இரு திலகங்களின் படங்களையும் மற்ற முன்னணி நடிகர்கள் படங்களையும் திரை அரங்கு சென்று பார்த்துள்ளேன்.
17 வயது முதல் 45 வயது வரை திரைப்படங்கள் பார்க்கும் எண்ணிக்கை மாதம் ஒன்று வீதமேதான்

கடைசியாகக் கரூரில் படையப்பா பார்த்தேன்

ஈரோடு வந்து கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படம் பார்த்து அடுத்தவன் அழகான மனைவியுடன் அவன் மகனையும் கடத்தி வந்து திருமணம் செய்து கொண்ட அற்புதக் கலை அம்சம் கொண்ட திரைப்படம் பார்த்த அந்த நாளோடு திரை அரங்கு சென்று படம் பார்க்கும் எண்ணத்தை தலை முழுகினேன்.

தொலைக்காட்சிகளில் அவ்வப்போது சில சிறந்த படங்களை முழுதாக இன்றி சில சில காட்சிகள் நகைச்சுவைக் காட்சிகள் மட்டுமே பார்ப்பதுண்டு.

17 வயது முதல் 59 வயது வரை காலை 9மணிக்கு புறப்பட்டு இரவு 2 மணி வரை வணிக வாழ்க்கை. 

9மணி முதல் இரவு 10மணி வரை வேலைக்கு சென்று வந்த வாழ்க்கை.
இதில் இங்கே திரைப்படங்கள் பார்க்க நேரம். 

வீட்டில் இரவு எனக்குப் பிடிக்காத தொலைக்காட்சி தொடர்கள் ஓடும்.
காலை 8முதல்9வரை அமுத கானம் கேட்பது மட்டுமே. 

செய்திகளில் வன்முறை திருட்டு கொள்ளை ஊழல் பாலியல் வன்முறைகள் போன்ற செய்திகளே அதிகம் வருவதால் அது என் எரிச்சல் மன நிலையை வெளிப்படுத்துவதால் என் மனைவிக்கு நான் செய்திகள் பார்ப்பது பிடிக்காது.

இந்த லட்சணத்தில் நான் சினிமா வெட்டி வசனங்களைப் பார்ப்பது முடியுமா. காப்பி அடித்து எழுத நான் என்ன சித்தர் பாடல்களை
இலக்கியங்கள் படித்து என்னுடைய படைப்பு என தம்பட்டம் அடித்து அதனைப் புகழ ஜால்றாக்கள் வைக்க அரசியல்வாதியா

பிரபஞ்சம் தரும் எண்ணங்களை எழுதுகிறேன்
இந்த எண்ணங்கள் மற்றவர்களுக்கும் வரும். 

புகழ் படைத்தவர் போற்றப்படுகிறார் 

என் போன்ற ஏழை சொல் அம்பலம் ஏறாது என்ற அறிவு கூட இல்லாத கூமுட்டையா நான்?

நம்பினால் நம்புங்கள். 

என் சிந்தை முழுவதும் தமிழ் தமிழர் வாழ்வு சங்க இலக்கியக் காலத்துக்கு திரும்ப வேண்டும் என்பதே.

வரலாறு தன்னையே திருப்பிக் காட்டும் போது

பூங்காற்று திரும்பாமலா போகும்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!