நான் கடவுளைக் கண்டேன்! ஷர்மிளா

நான் கடவுளைக் கண்டேன்!

 ஒரு குழந்தை வடிவிலே!!

அவன் கருணையைக் கண்டேன்!!! 

கொஞ்சும் மழலை வடிவிலே!!!!

அவள் ஒரு சாலை ஓரம் வசிக்கும் குடும்பச் சிறுமி.

ஒரு நாள் என் எதிரே அவள் வந்தபோது என்னிடமிருந்த 3 ரூ பிஸ்கட்டைக் கொடுக்க மகிழ்வுடன் பெற்றாள்.
இன்று மீண்டும் நான் அவளை அழைத்து அதே பிஸ்கட்டை பால் வழங்கும் அங்காடியில் வாங்கிக் கொடுத்தேன்.

பெற்றுக்கொண்டு சாலையைக் கடந்த அவள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு நாய்க் குட்டியிடம் கொஞ்சியவாரே அந்த பிஸ்கட்டை புகட்டத் தொடங்கினாள்.

என் விழிகள் கசிந்தன.

இன்னும் இந்தத் தமிழ் மண்ணில் அன்புக்குப் பஞ்சமில்லை.

தமிழன்னை எங்களை என்றும் அன்போடு வாழ வைப்பார்!!!!!

அவரே உலகின் கருணைத் தாய்!!!!!!

பின்குறிப்பு
அந்தச் சிறுமியின் பெயர் ஷர்மிளா
அவளது தந்தையின் தொழில் சோதிடம் பார்ப்பது 

சாலையோரத்தில் அமைந்துள்ள புளியமரத்தின் அடியில் தான் அவர்கள் குடும்பம் வசித்து வருகிறது 

மழை காலத்தில் இடி மின்னலில் அந்த குடும்பம் எப்படி தாக்குப் பிடிக்கும் என்பதுதான் என்னுடைய இப்போதைய கவலை

வருவோர் போவோருக்கு எல்லாம் சோதிடம் சொல்பவரின் நிலை சாலையோர புளிய மரத்து அடி என்பதுதான் 

சாதகம் பார்ப்பவர்கள் சோதிடத்தில் பயனேதும் இல்லை என்பதை இப்போதாவது கற்றுக்கொள்ளவேண்டிய பகுத்தறிவுப் பாடம்

மற்றுமொரு பின்குறிப்பு 

ஈரோடு சத்தியமங்கலம் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக அந்தப் புளியமரம் உட்பட சாலை ஓர மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு விட்டன

வெளிநாடுகளில் வேரோடு பிடிங்கி வேறு இடத்தில் நடுவார்கள்
 நம் நாட்டுல காண்ட்ராக்ட் விட்டு அறுத்து கமிஷன் அடிப்பார்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!