நிர்வாகச் சீர் திருத்தச் சிந்தனை

என்னுடைய 17 ஆவது வயதில் ஆட்டோமொபைல்ஸ் துறையில் அடியெடுத்து வைத்தேன். பெரிய பெரிய கனவுகள். வணிகத்தை விரிவு செய்யக் கணினி மயமாக்குதல், ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தல், ஏராளமான செல்வம் சேர்த்து உறவுகளுக்கும் மற்றவர்களுக்கும் உதவுதல் போன்ற எதிர்பார்ப்புகளுடன் தான் என்னுடைய வணிகத்தை துவக்கி இருந்தேன்.

கர்மவீரரின் நேர்மை குணம் என் இதயத்தில் நுழைந்து உடலெங்கும் இரத்த நாளங்கள் ஆகப் பரவி ரத்தம் போல் ஓயாது வேலை செய்து கொண்டிருந்தது.

 எனினும் என்னுடைய கனவுகள் தகர்ந்து கடுமையான நட்டத்துடன் எனது நாற்பத்தி மூன்றாவது வயதில் வணிகம் ஒரு முடிவுக்கு வந்தது. 
அடுத்த நாடோடிப் பயணம் ஈரோடு நோக்கி.

இங்கு நான் வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் எழுந்தது.
நானும் வேலைக்குச் செல்ல முடிவு செய்தேன்.

முதலில் பால் பண்ணையில் வேலை. அதற்கு என் உடல்நிலை ஒத்து வராததால் எழுதுபொருள் விற்பனை அங்காடியில் வேலை. என்னைப் புரிந்து கொள்ளாத மற்றவர்களால் அடுத்தடுத்து வேறு வேறு நிறுவனங்களில் வேலை செய்ய விதி அழைத்துச் சென்றது.

 வணிகத்தில்அடிபட்ட நிலையிலும் நான் வேலைக்குச் சென்ற இடங்களில் எல்லாம் அங்குள்ள குறைகளை முதலில் கவனிப்பேன். 

பின்பு அதனை சரி செய்வதற்கு என்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன்.  

வேலைக்கு சேர்ந்த முதல் நாள் அன்றே  என்னுடைய மனம் ஏதோ எனது சொந்த நிறுவனம் போல உரிமையாளர்கள் ஏற்றுக் கொள்ளும் இடங்களில் அதனை செம்மையாக நிறைவேற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சிந்திக்கத் துவங்கிவிடும். அதற்குரிய வழிமுறைகளும் என்னுள் தெளிவாகும். நிர்வாகம் அனுமதிக்கும் இடங்களில் எல்லாம் என்னால் இயன்ற அளவு மாற்றங்களையும் செய்துவிட்டு அங்கு பணியாற்றிய ஒரு அடையாளத்தை விட்டு வந்துள்ளேன். 

வாழ்க்கையில் பல சோதனைகளையும் எதிர்ப்புகளையும் வணிகத்திலும் அடைந்து தோல்வியுற்ற பலர் நடந்ததை நினைத்து வேலைக்கு வந்த இடத்தில் ஏனோதானோ என்று நடந்து கொள்வதும் சீரும் சிறப்புமாக வாழ்ந்த என்னை இவர்கள் எல்லாம்  மோசமாக நடத்துவதா என்ற வெறுப்புடன் கூலிக்கு மாரடிக்கும் நிலையில் உள்ளதைக் கவனித்து வந்துள்ள நான்

 என்னுள்ளும் இந்தத் தவறை செய்ய ஒருபோதும் அனுமதியேன்.

எவர் எப்படி இருந்தால் என்ன?
நான் 
இப்படித்தான் இருப்பேன் இப்படித்தான் வாழ்வேன்

மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது.


கருத்துகள்

  1. தங்களின் குணத்தை மாற்றிக் கொள்ளாமல் பயணியுங்கள்
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. ஐந்தாம் தமிழ்ச் சங்கம்
    தங்கள் வலைப்பூவின் பெயர்க் காரணத்தை அறிய
    மனம் விழைகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

      என்னை வழி நடத்தும் மகா சக்தி

      அதை நிறைவேற்ற வேண்டும் என்று பணித்து என்னை வழி நடத்துகிறது

      வலிகளால் வேதனைகளால் அவமானங்களால் மனம் சலித்து விடாது
      மனம் பக்குவப்பட நெறிப்படுத்தி வழி காட்டுகிறது

      அந்த வழியில் என் பயணம்

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!